தேனியில் நடிகர் பிரபுவை பார்க்க ஆசை ஆசையாக ஓடி வந்த மாணவர்கள்.. சிவாஜியை பற்றி பேசியதுமே நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனிக்கு நடிகர் பிரபு வருகிறார் என்றதுமே, அங்குள்ளோருக்கு பெரும் மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்பட்டது.. பிரபுவை பார்க்க பலரும் ஆர்வத்துடன் இருந்தனர்.. பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபு, பொதுமக்கள் தன் மீது பொழியும் அன்பில் நெகிழ்ந்து போனார்.. மேலும் பள்ளி மாணவர்களிடம் தன்னுடைய தந்தையின் பெருமைகளையும் பேசினார்.. இந்த பேச்சுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது லட்சுமிபுரி.. இங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பரிபல நடிகர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Theni Actor Prabhu Sivaji Ganesan

தேனியில் நடிகர் பிரபு

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமாக வந்திருந்தனர்... அப்போது நடிகர் பிரபு சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதேபோல் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களையும் அவர் கௌரவித்தார். பிறகு மேடையில் பேசும் போது நடிகர் பிரபு தனது தந்தை சிவாஜி கணேசனைப் பற்றி நினைவுகளை பகிர்ந்தார்.

"எனது தந்தை 'பராசக்தி' சினிமாவில் நடிப்பதற்கு முன், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹீம் தியேட்டரில் 6 மாதங்கள் தங்கியிருந்தார். அந்த இடத்தில் அவர் நாடகங்களை நடத்தினார். அப்போது பெரியகுளம் மற்றும் தேனி மக்கள் அவரை மிக அன்புடன் வரவேற்றனர்..

சிவாஜி கணேசன் - நெகிழ்ச்சி

எனது அப்பா மீது நீங்கள் காட்டிய அன்பே இன்று என்னையும், எனது மகனான விக்ரம் பிரபுவையும் இந்த மேடையில் நிற்க வைக்கிறது. உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளனாக இருக்கிறேன்..

எப்போதுமே குழந்தைகள் பெரியவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அதே சமயம் பெற்றோர்கள் குழந்தைகளை அவர்களது விருப்பப்படி விட வேண்டும். அப்போது அவர்கள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் வளருவார்கள்" என்றார்.

பிரபுவின் இந்த வருகையானது அவரது தந்தை சிவாஜி கணேசனின் நினைவுகளை பகிர்ந்துகொள்வதும், மாணவர்களை ஊக்குவிப்பதும் பள்ளி வளாகத்தில் விழாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றது..

படையப்பா - சபாஷ்

முன்னதாக தேனிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நடிகர் பிரபு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "படையப்பா படத்தை இன்று மட்டுமல்ல, இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் மக்களும், ரசிகர்களும் அதை கொண்டாடுவார்கள்.

அந்த படத்தில் நடித்த சிவாஜி அய்யா, மணிவண்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் இப்போது இல்லை. அருமையான படம், அருமையான இசை, ஒளிப்பதிவு. குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இந்த படத்தை பார்க்கலாம்" என்று பெருமையுடன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+