நாளைய முதல்வரே.. கூட்டணிக்கு தயாராவோம்.. நடிகர் விஜய் ரசிகர்களின் அசரவைக்கும் போஸ்டர்.. பரபர தேனி

Subscribe to Oneindia Tamil

தேனி: நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைத்தும், முதலமைச்சர் தளபதி விஜய் எனவும், விஜய் தலைமையில் கூட்டணி அழைப்புக்கு தயாராவோம் எனவும் விதவிதமாக தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர் ஆவார்கள். மேலும் நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கட்சி நடத்தி வருகின்றனர்.

இதுதவிர திமுக, அதிமுக, பாஜகவில் கட்சிகளில் நடிகர், நடிகைகள் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்து முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் இறுதியில் பின்வாங்கினார்.

விஜயை சுற்றும் அரசியல்

விஜயை சுற்றும் அரசியல்

இருப்பினும் கூட நடிகர் ரஜினியை அரசியலுக்கு வரவைக்க வேண்டும் எனக்கூறி அவ்வப்போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர் கலாசாரம் தற்போது விஜய் ரசிகர்களுக்கும் பரவி உள்ளது. இதனால் தான் சமீபகாலமாக நடிகர் விஜயை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் அவரது படத்தில் இடம்பெறும் வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது.

திரையுலகில் 30 ஆண்டு

திரையுலகில் 30 ஆண்டு

இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என சிலர் கணித்துள்ளனர். ஆனால் இதுபற்றி விஜய் இன்னும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதோடு அவரது தந்தை துவக்கிய கட்சிக்கும் நடிகர் விஜய் உடன்படவில்லை. இருப்பினும் நடிகர் விஜயை ரசிகர்கள் விடுவதாக தெரியவில்லை. இந்நிலையில் தான் நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.

பரபரப்பை கிளப்பும் தேனி போஸ்டர்கள்

பரபரப்பை கிளப்பும் தேனி போஸ்டர்கள்

அந்த வகையில் தான் தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பி உள்ளன. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த போஸ்டர்கள் பல்வேறு டிசைன்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் வகையில் உள்ளன. இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

நாளைய முதல்வரே

நாளைய முதல்வரே

அதன்படி போஸ்டர்களில் விஜய் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் கம்பீரமாக நடந்து வரும் வகையில் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு போஸ்டரில் நடிகர் விஜய்யை ‛‛நாளைய தமிழக முதலமைச்சரே'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் புஸ்ஸி ஆனந்தை நாளைய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணி அழைப்புக்கு

கூட்டணி அழைப்புக்கு

இன்னொரு போஸ்டரில் ‛‛ஜாதி , மதங்களை கடந்த எங்கள் முதல்வரே'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்துள்ளார். மற்றொரு போஸ்டரில் ‛‛இன்று சினிமாவில் தளபதி, நாளைய தமிழகத்தின் முதல்வரே'' எனவும், வேறு ஒரு போஸ்டரில் ‛‛அரசியல் கட்சிகளுக்கு கூட்டணி அழைப்புக்கு தளபதியாளரின் தலைமையில் தயாராகுங்கள்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+