கோவையில் வேலை செய்த தேனி பெண்.. எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத கோலம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுருளிராஜ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு சூரஜ்குமார் என்ற மகனும், 22 வயதில் சுபலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

What happened in Kandamanur to the woman from Theni who worked in Coimbatore

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த சுபலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வராததால் அவரை குடும்பத்தினர் தேடிவந்தார்கள்.

இந்தநிலையில், கண்டமனூரில் உள்ள கிணற்றில் சுபலட்சுமி பிணமாக மிதப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூரில் ஏசி கேட்ட பெண்

தேனியில் இப்படி என்றால், திருவள்ளூரில் கணவர் ஏசி வாங்கித் தராததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் இளம் பெண் ஒருவர் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் என்பவர், ஆகாஷ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

கோடை வெயில் மற்றும் புழுக்கம் காரணமாக, மோனிகா தனது கணவரிடம் ஏசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆகாஷ் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது

சனிக்கிழமை இரவு, வெக்கை அதிகமாக இருந்ததால் ஆகாஷும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளனர். மோனிகா மட்டும் அறையில் இருந்திருக்கிறார். நேற்று காலை ஆகாஷ் அறைக்குச் சென்று பார்த்தபோது, மோனிகா உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்திலிருந்து கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. திருவள்ளூர் போலீசார் இந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோனிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் என்பதால் மோனிகாவின் குடும்பத்தினர் இவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மோனிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள்.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+