தேனியில் இன்று இறுதி சடங்கு.. தாய்க்கு அருகிலே இளைப்பாற போகும் பாடகி பவதாரணி.. குறிக்கப்பட்ட இடம்
தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் மரணம் அடைந்த நிலையில், அவரத உடல் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் நேற்ற அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தேனியில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47 வயது) புற்றுநோய் காரணமாக கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பவதாரணி காலமானார். இதனிடையே இசை விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை சென்றிருந்த இளையராஜா, இந்த செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்து கண் கலங்கினார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற இளையராஜா, மகள் பவதாரணியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதனிடையே வெறும் 47 வயதில் பின்னணி பாடகி பவதாரணி, புற்று நோயால் மறைந்த செய்தி, திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பவதாரணி மறைக்கு திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இளையராஜாவிற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
இதனிடையே பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. பவதாரணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் பெற்றுக்கொண்டு, பவதாரணியின் உடலை சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைத்தனர்.
இதனிடையே பவதாரணியின் உடலுக்கு நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, சிவகுமார், ராமராஜன், விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில் உள்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் பவதாரணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று பவதாரணியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.அம்மாவின் அருகிலேயே புதைக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications