முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் விளக்கம்
தேனி: முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசு ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவி தொகை வழங்குவது, இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தில் விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதேபோல் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தொழிற்கல்வி பயிலவும் உதவி தொகை அளித்து வருகிறது.. குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான நிலையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவிகள் அரசின் ஒற்றைச் சாளர முறையின் வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுள்ளவர்கள் அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட தாசில்தாரை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெற்றதற்கான ஒதுக்கீடு சான்று, கல்லூரியில் பயிலும் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பிடச் சான்று, வருமானச் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப உறுப்பினர் சான்று ஆகியவை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications