"ஆடையை களைந்து நிர்வாணமாய் நின்றேன்".. பஞ்சாயத்து தலைவர் மீது பெண் புகார்.. தோட்டத்தில் என்ன நடந்தது
தேனி பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட் மீது இளம்பெண் தந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேனி: "அந்த சாமியார் சொன்னதால்தான், நான் நிர்வாணமாக நின்றேன்.. நிர்வாண பூஜைக்கு சம்மதிக்கவில்லை என்றால் உயிரே போய்விடும் என்று மிரட்டினார்.. அதற்காகத்தான் பயந்துகொண்டு, ஆடைகளை எல்லாம் அவிழ்த்து போட்டு முழு நிர்வாணமாக நின்றேன்" என்று இளம்பெண் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் மீது அளித்துள்ள புகாரானது, தீயாய் பற்றிக்கொண்டு எரிந்து கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் பெருகி வரும்நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டுதான் இருக்கின்றன..
கல்வியறிவு முழுமையாக கிடைக்க பெறாத சூழலில், மாந்திரீகம், மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து, அதனால் பல விபரீதங்களை சந்திக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன..

தப்பில்ல
மக்களின் மனப் பிரச்சனைகளை, பயம், கலக்கம் போன்றவற்றுடன் சேர்த்து இந்த மூட நம்பிக்கைகளையே, மூலதனமாக்கி காசுபார்க்கும் கூட்டமும் அதிகமாகி விட்டது.. ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் நிச்சயம் இருக்கத்தானே செய்வார்? இதோ ஒரு சம்பவம் தேனியில் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட பெண், போலீஸ் வரை சென்றுள்ளார்.. ஆனால், இதில் தன்மீது தவறு இல்லை என்கிறது எதிர்தரப்பு.. உண்மையிலேயே என்ன நடந்தது தேனியில்? மஞ்ச நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி. .. 22 வயதாகிறது.. இவர் தேனி மாவட்ட காவல் ஆணைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தாயத்து தாயத்து
அந்த மனுவில், "தாய் தந்தையை இழந்த நான் கணவரையும் பிரிந்து வாழ்கிறேன். இப்படி ஆதரவற்ற நிலையில் இருக்கும் நான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் சேர்ந்து வாழலாம் என்று என் தோழி கண்மணி ஆலோசனை சொன்னார். இதையடுத்து நானும் கண்மணியும் அவரின் கணவர் மனோவும் சேர்ந்து குறி சொல்லும் ஜோதிடரை செல்வராஜை பார்க்க போனோம். அவர் இப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜின் தோட்டத்து வீட்டிற்குச் சென்றோம்.

தோட்டத்தில் குடிசை
மாந்திரீகம் தாயத்து செய்ய 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார். உடனே 20000 ரூபாய் பணத்தை கொடுத்தேன். அதன்பிறகு, என்னுடன் வந்த கண்மணி வெளியே போக சொல்லிவிட்டு மாந்திரீக தாயத்து கட்ட வேண்டும் என்று தோட்டத்தில் உள்ள குடிசைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குடிசைக்குள் சென்றதும் மாந்திரீகம் பலிக்க வேண்டும் என்றால் நிர்வாண பூஜை செய்ய வேண்டும். அது இப்போதே செய்ய வேண்டும் என்றார். நான் அதற்கு தயங்கி வெளியேற நினைத்தபோது நிர்வாண பூஜை செய்ய மறுத்தால் உயிரே போய்விடும் என்று அதட்டினார்.

நிர்வாண நிலை
அதைக் கேட்டு நான் அச்சம் அடைந்து உடனே என் ஆடைகள் முழுவதையும் அவிழ்த்து போட்டு முழு நிர்வாணமாக நின்றேன். அப்போது என்னை அவரது செல்போனில் போட்டோக்கள் எடுத்தார். நிர்வாண நிலையில் இருந்த என்னிடம் நெருங்கி பாலியல் தொந்தரவு கொடுத்தார். பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது நான் கூச்சல் போட்டு வெளியே வந்து விட்டேன். வெளியே வந்து வந்ததும் இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் மாந்திரீகத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார் அந்த பெண்.

பச்சைப்பொய்
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அந்த பெண் சொல்லும்போது, "இந்த புகார் குறித்து போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் போலீசில் ஏற்கனவே நான் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இப்போது தேனி எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறேன்" என்றார் அந்த பெண்... இந்நிலையில், பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், மேற்கண்ட இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்துள்ளார்.. இதெல்லாம் தன்மீது போடப்படும் வீண்பழி என்றும் திட்டவட்டமாக சொல்கிறார்.

பழிக்குப்பழி
அவர் சொல்லும்போது, நான் ஊராட்சி மன்ற தலைவரானதுமே, ஜோதிடம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. காரணம், மக்கள் பணி செய்வதற்கே எனக்கு நேரம் போதாமல் இருக்கிறது... குடும்பப் பிரச்சனை பற்றி போலீஸில் புகார் அளிக்கத்தான் சொன்னேன்... இதற்காக என் மீது இப்படி ஒரு பொய் புகார் சுமத்தப்பட்டுள்ளது.. நானும் எஸ்.பி. அலுவலகத்தில் பிரச்சனை குறித்து விளக்கம் அளித்து இருக்கிறேன். பொட்டிபுரம் பஞ்சாயத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய சிவக்குமார் என்பவரை கையும் களவுமாக பிடித்து தந்ததே நான்தான்.. லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹோப் தீர்வு
இந்த விரோதத்தால் தான், வறுமையில் வாழும் இந்த பெண்ணை பயன்படுத்திக் கொண்டு என் மீது இப்படி பொய்யான பாலியல் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என்கிறார் செல்வராஜ். இப்படி 2 தரப்பிலுமே புகார்கள் பரபரத்து வரும்நிலையில், இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. எனவே, இதுகுறித்து போலீசார்தான் தீவிரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.












Click it and Unblock the Notifications