தேனியில், வெளிநாடுகள், வடமாநிலங்களில் இருந்து பணம் அனுப்பினால் முடங்கிய வங்கிக் கணக்குகள்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலரும் வடமாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். சிலர் பணி நிமித்தம் வங்கிக்கு செல்ல முடியாத போது, தங்களின் நண்பர்களிடம் பணத்தை கொடுத்து தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பச் சொல்கின்றனர். அவ்வாறு பணம் அனுப்பியபோது அவர்கள் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சைபர் கிரைம் போலீசார் எடுத்து வருகிறார்கள். தற்போதைய சூழலில் ஜிபே தொடங்கி போன் பே வரையில் அனைத்து யூபிஐ கணக்குகளையும் கவனமாக கையாள வேண்டும். அதேபோல் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார், பான் கார்டு விவரங்கள், பிறந்த தேதி, ஓடிபி, மெயில் ஐடி என எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்.குறிப்பாக சொல்வது என்றால், பணம் அனுப்புதல், பணம் பெறுதல் போன்றவற்றில் கவனமாக இல்லாவிட்டால் சைபர் குற்றங்களில் மக்கள் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

Why are bank accounts in Theni frozen when money is sent from foreign countries and northern states

ராணுவ வீரர்கள்

குறிப்பாக தங்கள் குடும்பத்தினருக்காக வெளிநாடுகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் வங்கி மூலம் இல்லாமல் தனி நபர்கள் மூலமாக பணம் அனுப்பும் போதும் சைபர் குற்ற வலைகளில் சிக்கி வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தேனி மாவட்டத்திலும் அவ்வாறு பணம் அனுப்பியபோது அவர்கள் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

பணம் அனுப்பினால்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வடமாநிலங்களில் ராணுவ வீரர்களாக பணியாற்றுகிறார்கள். அவர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பியபோதும், வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் அங்கிருந்து பணம் அனுப்பியபோதும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது நடக்கிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது.

தனி நபர்கள் மூலம் பணம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலர் பணி நிமித்தம் வங்கிக்கு செல்ல முடியாத போது, தங்களின் நண்பர்களிடம் பணத்தை கொடுத்து தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பச் சொல்கிறார்களாம். அவர்களின் நண்பர்களும் வங்கிகள் மூலமாக இல்லாமல் தனிநபர்கள் மூலமாகவோ, தனியார் பணம் அனுப்பும் ஏஜென்சிகள் மூலமாகவோ அனுப்புகிறார்களாம்.

சைபர் கிரைம் தொடர்பு உடையவர்கள்

அவ்வாறு பணத்தை அனுப்பும் நபர்களின் வங்கிக் கணக்குகள் ஏதேனும் சைபர் குற்றங்களில் தொடர்புடையதாக இருந்தால் அந்த வங்கிக் கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் முடக்குவது நடக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் இருந்து யாருக்கு எல்லாம் பணம் அனுப்பப்பட்டதோ அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுவதும் நடக்கிறது.. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சுமார் 10 பேர் தங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+