தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி ஏன்? ஓபனாக உண்மையை உடைத்த ஓ பன்னீர்செல்வம்
தேனி: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட களம் இறங்க உள்ளார் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தனது விருப்பத்தின் பேரிலேயே டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி லோக்சபா தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கும், டிடிவி தினகரன் தரப்புக்கும் கணிசமான ஆதரவு தேனியில் இருப்பதுடன், முக்குலத்தோர் வாக்குகளே வெற்றியாளர்களை தீர்மானிப்பதில் இந்த தொகுதி முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் டிடிவி தினகரன் களம் இறங்குகிறார்.

தேனி லோக்சபா தொகுதி என்பது பல காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதியாகும். இங்கு கடைசியாக 1996ம் ஆண்டு தான். திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது . அதற்கு முன்பு 1980ல் மட்டுமே திமுக வென்றது. இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் வாக்குகள் முதல் இடத்தில் உள்ளது.. இரண்டாவது இடத்தில் தலித்துகள் இருக்கிறார்கள். இதேபோல் நாயுடு, கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். தேனி தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளமும், சோழவந்தான் தொகுதியும் தனி தொகுதிகள் ஆகும்.
சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரியகுளம் தொகுதியில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள அதிகமாக இருக்கிறார்கள். கம்பம் தொகுதியில் கவுண்டர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உசிலம்பட்டி, சோழவந்தான், போடி மற்றும் ஆண்டிப்பட்டியில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் தலித்துகள் அதிகமாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேனி லோக்சபா தொகுதியில் முக்குலத்தோர் ஓட்டுகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
டிடிவி போட்டியிட்டால் வெல்வது எளிதல்ல.. தேனியில் அதிமுகவிற்கு பெரிய சிக்கல்.. யார் இந்த நாராயணசாமி?
இந்நிலையில் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெருக்கத்தில் தான், பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் மிகப்பெரிய உயரம் தொட்டார். முதல்வர் என்கிற அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் வளரவதற்கு டிடிவி தினகரனும், சசிகலாவுமே முக்கிய காரணம் ஆகும.
தேனி தொகுதியை பொறுத்தவரை தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு உள்ளதால் டிடிவி தினகரனுக்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன் களம் இறங்குவார் என்பதை உணர்ந்து தான், காங்கிரஸ் கட்சிக்கு திமுக இந்த தொகுதியை தரவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, டிடிவி தினகரனின் சிஷ்யரான தங்கத்தமிழ்செல்வனை களம் இறக்கி இருக்கிறது. அதிமுகவில் நாராயணசாமி என்பவர் தேனி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் திமுக மற்றும் அதிமுக கடும் சவாலை சந்திக்கும் என்று சொல்கிறார்கள். அதேநேரம் டிடிவி தினகரனுக்கு ஏன் தேனி தொகுதியை ஓ பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை.. ஏனெனில் கடந்த முறை அவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் மகனை வெற்றி பெற வைத்தார் ஓ பன்னீர்செல்வம்... இந்த முறை தானும் போட்டியிடாமல் டிடிவி தினகரனுக்கு விட்டுக்கொடுக்க காரணம் என்ன என்பது பலருக்கும் கேள்வி உள்ளது. இதுபற்றி ஓ பன்னீர்செல்வமே விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுகவிற்கு தேனி மற்றும் திருச்சி கொடுக்கப்பட்ட நிலையில், தேனியில் டிடிவி தினகரனே களம் இறங்க உள்ளாராம். இதனை ஓ பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுவதாகவும் கூறினார். ஓ பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் டிடிவி தினகரனையும் சசிகலாவையும் அதிமுகவில் வெளியேற்ற வேண்டும் என்று கூறிவந்த நிலையில், இன்று அவரே டிடிவி தினகரனை தேனியில் போட்டியிட அறிவுறுத்தி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications