சும்மாவே இருக்கிறது இல்லை.. அதான் டூவீலரில் கூட்டிட்டு போய்.. வெலவெலக்க வைத்த கலையரசி
கள்ளக்காதல் விபரீதத்தினால் கணவனை கொன்ற மனைவி கைதானார்
தேனி: "எப்ப பாரு தகராறு செய்துட்டே இருந்தார்.. என்னை ஜாலியாக வாழவும் விடலை.. அதனான் டூவீரில் அழைத்து சென்று, என் கள்ள காதலனுடன் சேர்ந்து என் புருஷனை கொன்றுவிட்டேன்" என்று மனைவி வாக்குமூலம் தந்துள்ளார்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே, மேலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை.. மனைவி பெயர் கலையரசி.. முத்துக்காளைக்கு வயசு 42.. கலையரசிக்கு 29 வயதாகிறது.. 13 வயது மூத்தவர்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.. முத்துக்காளை கேரளாவில் சமையல் வேலை பார்த்து வந்தார். ஆனால், கலையரசியோ, சொந்த கிராமத்தீல் சேதுபதி என்ற இளைஞருடன் நெருக்கமானார்.. இந்த விஷயம் தெரிந்த முத்துக்களை கொந்தளித்துவிட்டார்.
பிறகு அந்த கிராமத்தை காலி செய்துவிட்டு, தேனி அருகே உள்ள தர்மபுரி என்ற கிராமத்திற்கு கலையரசியை அழைத்து வந்தார்.. இந்நிலையில், கடந்த 3ம் தேதியில் இருந்து முத்துக்காளையை காணவில்லை.. தன்னை பார்க்க வருவதாக தம்பி முத்துக்காளை சொல்லியிருந்த நிலையில், அவர் வராததால், அண்ணன் ஈஸ்வரன் சந்தேகமடைந்தார்.
எனவே கலையரசியிடம் சென்று, "என் தம்பி எங்கே" என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தங்களுக்குள் சண்டை வந்துவிட்டதால், முத்துக்காளை கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கலையரசி பதிலளித்தார். ஆனால், இதை நம்பாத முத்துக்காளையின் அண்ணன் ஈஸ்வரன், நேரடியாக வீரபாண்டி போலீசில் புகார் சொன்னார்.. போலீசாரும் முத்துக்காளையை தேடி வந்தனர்.
அப்போது, தர்மபுரி - காமாட்சிபுரம் சாலையில் ஓடைப்பட்டி அருகே, ஒரு கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் வந்தது.. போலீசார் விரைந்து சென்று பார்த்தால், அது முத்துக்காளையின் உடல் என்று தெரியவந்தது. இதையடுத்து, முதல் விசாரணையே கலையரசியிடம்தான் ஆரம்பமானது.
அப்போது கலையரசி வாக்குமூலத்தில் சொன்னதாவது: "என்னை சந்தோஷமாகவே வாழ விடலை.. காதலனுடன் சேரக்கூடாது என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.. அதனால் நைசாக பேசி ஏமாற்றி சின்னமனூருக்கு டூவீலரில் அழைத்து சென்றேன்.. நைட் அங்கே போய் சேர்ந்ததும், பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு மறைவாக போய் நின்று கொண்டேன்.
அப்போது என் கள்ளக்காதலன் சேதுபதியும் அவரது நண்பர் கணேசனும் அங்கு வந்து இரும்பு கம்பியால் முத்துக்காளையை தலையில் அடித்துக் கொன்றுவிட்டனர்.. சடலத்தையும் கிணற்றில் வீசிவிட்டு வந்துவிட்டோம்" என்றார். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கணேசனை தேடி வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications