கணவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு.. தட்டிகேட்டால் வரதட்சிணை கேட்டு கொடுமை.. மனைவி தற்கொலை?

Subscribe to Oneindia Tamil

தேனி: வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் அன்பரசன் (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (24) என்பவரும் காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சப்பாளையம் இந்திரா நகரில் வேலை நிமித்தமாக குடி வந்துள்ளனர்.

கணவர் அன்பரசன்

கணவர் அன்பரசன்

கணவர் அன்பரசன் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் சித்ராவிற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரங்கள் குறித்து சித்ரா கேட்ட போது அன்பரசன் நகைகளை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளைய மகளுக்கு பிறந்த நாளில் சித்ராவின் சகோதரர் வெள்ளிக் கொலுசு ஒன்று வாங்கி வந்துள்ளார்.

வெள்ளி

வெள்ளி

தங்கத்தில் கேட்டால் வெள்ளியில் கொடுக்கிறீர்களா என அன்பரசன் மற்றும் அவரது தயார், தந்தை, சகோதரி ரோகிணி ஆகியோர் சித்ராவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். அப்போது சனிக்கிழமை தேனி வரும்போது அழைத்து செல்வதாக கூறியுள்ளனர்.

தகவல்

தகவல்

தனது இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கோவிலுக்கு அனுப்பி விட்டு கடந்த வியாக்கிழமை மாலை சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் அன்பரசன் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சித்ராவின் பெற்றோர்களுக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

சித்ரா இறப்பு

சித்ரா இறப்பு

திருமணமாகி நான்கு ஆண்டுகளில் சித்ரா இறந்ததால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். நேற்று கோவை தெற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இந்நிலையில்
இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டு சித்ராவின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை அன்பரசன் உடலை பார்க்க வரவில்லை என சித்ராவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

சித்ரா கொலை

சித்ரா கொலை

தனது மகள் இறப்புக்கு காரணமான அவரது கணவர் அன்பரசன், சகோதிரி ரோகிணி , மாமியார் , மாமனார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். சித்ரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலையா?, தற்கொலையா? என்பது குறித்து தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+