பச்சை துரோகம்.. கொன்று சடலத்தை எரித்த தங்கச்சி.. ஸ்கெட்ச் போட்ட அக்கா.. அதிர்ந்த தேனி!
தேனி கொலையில் 4 பேர் கைதாகி உள்ளனர்
தேனி: காதலனின் கழுத்தை நெரித்து இளம்பெண் கொன்று தீ வைத்து எரித்தும் விட்டார்.. ஆனால், இந்த இப்படி ஒரு கொடூர கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுகொடுத்ததே, அந்த பெண்ணின் சொந்த அக்கா, வித்யா என்பவராம்.. இந்த சம்பவத்தினால் தேனியே ஆடிப் போய் கிடக்கிறது..!
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், பாலூத்து என்ற இடம் உள்ளது.. இங்குள்ள ஒரு புதரில் கடந்த 21-ந்தேதி ஒரு ஆண் பிணம் கிடந்தது... அது எரிந்த நிலையில் கிடந்தது.
உடனடியாக தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசாரும் அந்த சடலத்தை மீட்டனர்.. எப்படியோ கொலை செய்யப்பட்டு 2 , 3 நாள் ஆன மாதிரி தெரிந்தது..

கிராமம்
இறந்து போனது திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பது தெரியவந்துது.. இவருக்கு 29 வயதாகிறது. இந்த ஆனந்தராஜ் தான் காணாமல் போய்விட்டார் என்று கடந்த கடந்த 15-ந்தேதி விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.. பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் கொலை செய்யப்பட்டுதான் இறந்திருக்கிறார் என்பது உறுதியானது.

கொலையாளி?
ஆனால், யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? சொந்த ஊர் எங்கோ இருக்க, இந்த ஊருக்கு இவர் ஏன் வந்தார்? என்ற கேள்விகளும் எழுந்தன.. இதற்காகவே 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அப்போதுதான், ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தியை லவ் பண்ணிகொண்டிருந்தார் என்பதும், காதலியை பார்ப்பதற்காகவே இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

வாக்குமூலம்
இதையடுத்து, போலீசார் விஜயசாந்தியை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில் விறுவீடுவில் உறவினர் பிரபாகரனுடன் விஜயசாந்தி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அவரை விரட்டி பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது விஜயசாந்தி சொன்னதாவது: "நான் ஆனந்தராஜை உயிருக்குயிராக காதலித்தேன்.. ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.. ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.. நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன்..

கொலை
அப்போது எங்களுக்குள் தகராறு வரவும், ஆத்திரத்தில் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டோம்.. அந்த சடலத்தின் மீதும் பெட்ரோல் ஊற்றியும் எரித்து விட்டோம். பிறகு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம்.. இந்த கொலைக்கு பிளான் போட்டு கொடுத்ததே என் அக்கா வித்யா தான்" என்றார். இதையடுத்து, விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications