22 சென்ட் நிலம்.. திருநெல்வேலியில் அரசு அதிகாரிக்கு கை நிறைய சம்பளம்.. மனைவிக்கு ரூ.359 கோடி சொத்து
திருநெல்வேலி: நெல்லை தம்பதியினர் செய்த காரியம், ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துள்ளது. இந்த தம்பதியினர் அரசு ஊழியர்கள் ஆவர்.. இவர்கள் கைநிறைய சம்பளம் வாங்கியும்கூட, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? யார் இந்த திருநெல்வேலி தம்பதியினர்?
தமிழகத்தில், பத்திரப்பதிவு, வருவாய்த்துறையில் சமீபகாலமாகவே சொல்ல முடியாத அளவுக்கு லஞ்சம் பெருக்கெடுத்து வருகிறது.. ஒருபக்கம் லஞ்ச கொடுமை என்றால் மற்றொரு பக்கம், போலியான ஆவணங்களை அச்சு அசல் ஒரிஜினல் போலவே தயாரித்து, மோசடிகளும் நடக்கின்றன.. போலி பத்திரத்தின் மூலம் நில அபகரிப்பு முதல் லஞ்சம் பெறுவது வரை ஏராளமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த புகார்களை களையும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாலும், முற்றிலுமாக குற்றங்களை குறைக்க முடியவில்லை. இதனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும், மோசடி செய்வோரின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
லஞ்சம் - போலி ஆவணங்கள்
கடந்த மாதம் திருவள்ளூர் நீதிமன்றத்திலும் இதுபோன்ற சொத்து சேர்த்த ஒரு வழக்கில் தீர்ப்பு தரப்பட்டது. அதாவது, 1998 ஜனவரி 1 முதல், 2007 அக்டோபர் 30 வரையில், அசையும், அசையா சொத்துகள் ரூ.69 லட்சத்துக்கு வாங்கி குவித்திருக்கிறார்..
அருணாசலத்துக்கு 70 வயதாகிறது.. இவர் அரசு ஊழியராக கடந்த 1980-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். பிறகு அடுத்தடுத்த பதவி உயர்வுகளை பெற்றார்.. பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தும் வந்தார். அந்தவகையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முசிறி கோட்டாட்சியராக புரமோஷன் பெற்று, 2008, ஏப்ரல் 8 வரை பணிபுரிந்துள்ளார்.
திருத்தணி தம்பதிக்கு தண்டனை
அந்தவகையில், திருத்தணியில் வருவாய் கோட்ட அலுவலராக அருணாச்சலம் தன்னுடைய பெயரிலும், மனைவி லலிதா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்திருக்கிறார். இறுதியில் இந்த தம்பதிக்கு 3 வருடம் தண்டனை மட்டுமல்லாமல், அருணாசலத்துக்கு ரூ.35 லட்சம், லலிதாவுக்கு ரூ.5 லட்சம் என அபராதமும் திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
அதேபோல கடந்த மாதம், திருச்சியிலும் ஒரு மூத்த ஜோடி வசமாக மாட்டிக் கொண்டது.. திருச்சியில் ஒன்றிய கலால் துறையில் சூப்பிரண்டாக இருந்து ஓய்வு பெற்ற கோவிந்தசாமிக்கு 66 வயதாகிறது.. 1.1.2002 முதல் 23.2.2012 வரை தூத்துக்குடியில் பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 10 லட்சம் சொத்துக்களை மனைவி கீதா பெயரில் சேர்த்துள்ளார் கோவிந்தசாமி.
கோவிந்தசாமிக்கு யாருமே துணையில்லை
இதையடுத்து, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட், "லஞ்சம் பெறுபவர்களின் குடும்பத்தினரும் லஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள்.. லஞ்சம் ஒரு மனிதனை குருடனாக்குகிறது. அப்பாவி மக்களின் நியாயமான காரணத்தை நாசமாக்குகிறது என்று கண்டித்த நீதிமன்றம், "கீதாவை தவிர கோவிந்தசாமிக்கு வேறு யாரும் இல்லை, கோவிந்தசாமி, அவரது மனைவி கீதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், முறையே ரூ.75 ஆயிரம், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
கோவிந்தசாமி கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பதிவு செய்துள்ளார். அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள கீதாவை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் இருவருக்கும் மதுரை சிறை கண்காணிப்பாளர் ஏப்ரல் 10ம் தேதி வரை பரோல் வழங்க வேண்டும். பரோல் முடிந்ததுமே, 2 பேரும் மறுபடியும் 10ம் தேதி மாலைக்குள் ஜெயிலில் சரண் அடைய வேண்டும்" என்று உத்தரவில் கூறியிருந்தார்.
வழக்கறிஞர்கள் போராட்டம்
2 நாட்களுக்கு முன்புகூட, திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகையில் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்திருந்தனர்..
சிறுவானூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 22 சென்ட் நிலம் அதாவது சுமார் 5 கோடி மதிப்பிலான இடத்தினை அங்குள்ள நபர்கள் போலி ஆவணம் போலி அரசு முத்திரை போலி அரசு அதிகாரியின் கையெழுத்து போட்டு பட்டாவிற்கு வட்டாட்சியரின் போலியான கையெழுத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்களாம். இன்னும் இதுபோல், போலி ஆவணங்களை வைத்து மோசடிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் வலுத்து வருகின்றன.
திருநெல்வேலி தம்பதி
இப்படிப்பட்ட சூழலில், திருநெல்வேலி மாநகராட்சி இன்ஜினியர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அசிங்கப்பட்டுள்ளார்.. அதாவது நெல்லை மாவட்டம் சாந்தி நகர் 28வது தெருவை சேர்ந்தவர் லெனின்.. 54 வயதாகிறது.. இவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி இன்ஜினியராக 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பெயர் சாந்தகுமாரி. இவர் நெல்லை தூய சவேரியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அதாவது 2 பேருமே அரசு ஊழியர்கள் ஆவர்.. இந்த தம்பதிக்கு இவர்களுக்கு பாபின் என்ற மகனும், பாபிலா பிளஸ்சி என்ற மகளும் உள்ளனர்.
கோடிகளை குவித்து
கைநிறைய சம்பளம் வாங்கியும்கூட, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை இந்த தம்பதி வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது லெனின், சாந்தகுமாரி தம்பதியினர், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்தது உண்மையென்று உறுதியானது.
அதாவது கடந்த 2018ல், இந்த தம்பதியின் சொத்து மதிப்பினை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.. அதில், ஏப்ரல் 1ம் தேதியில் ரூ.73 லட்சத்து 4 ஆயிரத்து 579 ஆக இருந்துள்ளது.. பிறகு 6 வருடங்கள் கழித்து, 2024ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியில் இந்த தம்பதியனரின் சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 83 ஆக உயர்ந்திருக்கிறது..
வருமானத்துக்கு அதிகமான சொத்து
ஆனால், 6 வருடத்தில் இந்த தம்பதியினரின் வருமானம் ரூ.2 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 355ஆக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆதற்கு பதிலாக, ரூ.3 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 589 சொத்து அதிகமாக சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. இதில் செலவு 98 லட்சத்து 96 ஆயிரத்து 440 ரூபாயாகும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த லெனின் மற்றும் சாந்தகுமாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
6 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தம்பதிக்கு பாபின் என்ற மகனும், பாபிலா பிளஸ்சி என்ற மகளும் உள்ளனர். கௌரவமான அரசு பதவியில் இருந்த தம்பதியினர், இன்று பொதுவெளியில் சிக்கியிருப்பது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications