பித்தளை சொம்பில் "புளியை கரைத்த" நெல்லை சூர்யா.. 5 பவுன் தங்க செயினை டக்னு கழட்டி.. யாரிந்த பெண்
நெல்லை: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? வசியம் செய்யணுமா, என்கிட்ட வாங்க.. பில்லி, சூனியம் வைக்கணுமா, என்கிட்ட வாங்க.. என்று கூவி கூவி அழைத்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் சாமியார்கள் பெருகி கொண்டே வருகிறார்கள்.. நாளுக்கு நாள் போலி சாமியார்கள் கைதாகினாலும், தொடர்ந்து இவர்களை நம்பி சென்று பணத்தையும் நிம்மதியையும் தொலைப்பவர்களும் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். இதோ சென்னையில் ஒரு கொடுமை நடந்துள்ளது..
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் விசாலினி. இநத தம்பதிக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் தம்பதி இருவருமே விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவர்களது வீட்டுக்கு மந்திரவாதி ஒருவர் வந்துள்ளார்.. விசாலினியின் ஜாதகத்தை பார்த்தபடி, தொடர்ந்து பேசினார்.. அப்போதுதான், அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டு, மாந்திரீக பூஜை செய்தால் தோஷம் கழியும், குழந்தையும் பிறக்கும், பூஜை செய்ய ரூ.35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்..
சமையல் புளியை கரைத்து
ஏற்கனவே விரக்தியிலும், சோகத்திலும் இருந்த விசாலினி, மந்திரவாதியின் பேச்சை முழுமையாக நம்பினார்.. ஆனால், தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய்கூட இல்லை என்று விசாலினி சொல்லவும், அப்படியானால் தங்க நகை இருந்தாலும் பூஜை செய்யலாம் என்று மந்திரவாதி சொல்லியிருக்கிறார்.
உடனே விசாலினி, குழந்தை ஆசையில், 5 சவரன் தங்க செயினை உடனே மந்திரவாதியிடம் தந்து பூஜையை துவங்குமாறு சொல்லி உள்ளார்.. சாமியாரும் 5 சவரன் நகையை வாங்கி ஒரு சொம்பில் போட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியை வைத்து, மாந்திரீகம் செய்வது போல டிராமா செய்துள்ளார்..

மூடிய சொம்பை, சாயங்காலம்தான் திறந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். பிறகு விசாலினி சொம்பில் இருந்த 5 சவரன் தங்க நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதிரடி கைது
உடனே கொளத்தூர் போலீசுக்கு ஓடிச்சென்று புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போதுதான், மந்திரவாதியாக வந்து நகையை திருடியது நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி சூர்யா (45) என்பது தெரியவந்தது.. இதையடுத்து, கொளத்தூர் போலீசார் நெல்லைக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
புளியை கரைத்த சூர்யா
அப்போதுதான், சூர்யா, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், சித்ரா என்ற பெண்ணிடமும் குடும்பத்தில் தோஷம் கழிப்பதாக கூறி, ஐந்தரை சவரன் நகைகளை திருடி சென்றதும் அம்பலமானது.. சூர்யா மீது தாராபுரம் போலீசிலும் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. சொம்புக்குள் கையை விட்டு மந்திரம் செய்து, நகையை பறித்த சம்பவம், சென்னைவாசிகளின் வயிற்றில் "புளியை கரைத்து" கொண்டிருக்கிறது












Click it and Unblock the Notifications