ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன் பலி! சாவு இப்படி கூடவா வரும்? நெல்லையில் பெற்றோர் கண்ணீர்
நெல்லை: நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் மரணமடைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா, பாட்டிதான் இந்த சிறுவனுக்கு ஆசையாக ரம்புட்டான் பழத்தை வாங்கி கொடுத்தனராம்.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் நிஜாம். இவரது மகன் ரியாஸ் (5). அங்குள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இவரது வீட்டிற்கு தாத்தாவும் பாட்டியும் இன்று வந்திருந்தனர்.

அப்போது சிறுவனுக்கு ரம்புட்டான் பழத்தை வாங்கி வந்தனராம். இந்த பழத்தை பார்த்ததுமே ரியாஸுக்கு உடனே சாப்பிட ஆசையாக இருந்ததாம். இதனால் அவர் அந்த பழத்தை பெரியோர் கண்காணிப்பில் சாப்பிடாமல் தனியே சாப்பிட்டுள்ளார்.
அப்போது பழத்தை எப்படி சாப்பிடுவது என தெரியாமல் சாப்பிட்டபோது அதன் விதை, ரியாஸின் தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுவன், திடீரென மயங்கி விழுந்தான். உடனே பதறிய அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள்.
இதனால் சிறுவனின் பெற்றோரும் தாத்தா பாட்டியும் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
ரம்புட்டான் பழம் ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இதன் வெளிப்புறம் முட்கள் நிறைந்த சிவந்த தோலையும், உள்ளே வெள்ளை நிற இனிப்புச் சுவையுள்ள சதைப்பகுதியையும் கொண்டிருக்கும்.
ரம்புட்டான் பழத்தின் முக்கிய நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ரம்புட்டானில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது. மேலும், இது இரும்புச்சத்தை உறிஞ்சவும் உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்: இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் எடையைக் குறைக்க உதவும்: ரம்புட்டான் பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இதை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது பசியைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.
எலும்புகளை வலுப்படுத்தும்: இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
இதய ஆரோக்கியம்: ரம்புட்டானில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கவும் உதவுகிறது.
உடனடி ஆற்றல்: ரம்புட்டான் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் இருப்பதால், அவை எளிதில் ஜீரணமாகி உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன.
சரும ஆரோக்கியம்: இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும். கொலாஜன் உற்பத்திக்கும் இது துணை நிற்கிறது.
நீரிழப்பைத் தடுக்கும்: ரம்புட்டான் பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் நீரிழப்பைத் தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள்: ரம்புட்டானில் ஃபிளாவனாய்டுகள், பீனாலிக்ஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
ரம்புட்டான் பழத்தை நேரடியாகவோ அல்லது ஜூஸ் போன்றோ அருந்தலாம். இதன் தோலையும் விதையையும் உண்ணக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications