நெல்லை அருகே கோர விபத்து, வேன் , 2 அரசு பேருந்துகள் மோதல் - 6 பேர் பலி
நெல்லை : நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வேன் , இரண்டு அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.

அதனால் நான்கு வழிச் சாலையில் வேனை அதன் ஓட்டுநர் திடீரென நிறுத்தி உள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அரசு பேருந்தும் வேன் நின்றதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனரும் அவசரமாக நிறுத்தியுள்ளார்.
அப்போது பேருந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பின்னர் வேன் ஓட்டுனர் , பேருந்து ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் பேசி சமாதானமாகினர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்பக்கமாக எடுத்த போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பின்னோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது.
அந்த பேருந்து முன்னால் நின்ற வேன் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் வந்தவர்கள் . பேருந்தில் வந்தவர்கள் என 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு பாளையங் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மதுரையைச் சேர்ந்த பிரதிவ் என்பவர் உயிரிழந்தார். மற்ற 17 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகர்கோவிலைச் சேர்ந்த தவசிமுத்து என்பவரும் பலியானார்.
இந்த விபத்தில் மொத்தம் 6 பேர் பலியாகினர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications