"அவர்" புரிஞ்சுகணும்! எல்லா எம்எல்ஏக்களும் எடப்பாடி பின்னால் தான்.. ஒரே போடாக போட்ட இன்பதுரை
திருநெல்வேலி: மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இன்பதுரை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் சாடி வருகின்றனர்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்
அதன்படி மின் கட்டணம் உயர்த்தியதைக் கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு அதிமுக வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

ஷாக் மாடல்
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "உள்கட்சி பிரச்சினை பற்றிப் பேசும் அளவுக்கு நான் அதிமுகவில் பெரிய தலைவர் இல்லை. ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தமிழக அரசு மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது. இது திராவிட மாடல் அரச இல்ல ஷாக் மாடல் அரசு.

தாமஸ் ஆல்வா எடிசன்
மின்சாரத்தைக் கண்டுபிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன். அந்த தாமஸ் ஆல்வா எடிசன் புரண்டு படுக்கும் அளவுக்கு அரசு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்பதே அதிமுகவின் நோக்கம். எந்த மதத்தினரையும் புண்படுத்தினால் அது தவறு. எல்லா நீதிமன்றத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்வு பெற்றுள்ளோம். எனவே விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் அதன் பிறகு எடப்பாடி தலைமையில் அதிமுக திமுவை அழித்து ஒழிக்கும் முயற்சியில் வீறு நடைபோட்டு இயங்கும்.

66 எம்எல்ஏக்கள்
எடப்பாடி தலைமையில் தான் 66 எம்எல்ஏக்கள் பெற்றிருக்கிறோம் என்பதை மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டம் தெரியாதவர் சபாநாயகர் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது கூட ஒரு புகார் கொடுத்துள்ளார். சபாநாயகர் பதவி என்பது மாண்புமிக்கது. அவர் குற்றம் சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். சபாநாயகர் கொடுத்தது பொய் புகார் என்று தெரிந்து தான். அன்றைக்கு நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றார்.

சபாநாயகர்
ஒருவேளை சட்டமன்றத்தின் மாண்பைக் காக்க அந்த வழக்கை வாபஸ் பெற்றிருந்தால் இன்றைக்கும் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் பெறவில்லை என்றால் சட்டமன்ற மண்பை பாதுகாக்க என்றால் வழக்கு முடியும் வரை சபாநாயகர் பதவி விலக வேண்டும். எதிர்க்கட்சி கொறடாவாக இருக்கக் கூடிய வேலுமணிக்கு அந்த வாய்ப்பை இனி சபாநாயகர் வழங்குவாரா என்ற சந்தேகம் எழுகிறது.

திமுக எம்பி
நாங்கள் வழக்கை நடத்தத் தயாராக இருக்கிறோம் வழக்கு கொடுத்தவர் என்ற முறையில் சபாநாயகர் நீதிமன்றம் வரவேண்டும் அப்போது நாங்கள் கேள்வி எழுப்புவோம். எனவே வழக்கு முடியும் வரை அவர் பதவி விலகி இருக்க வேண்டும். நெல்லலை எம்பியின் மகனை மணல் கடத்தல் வழக்கில் தேடுகிறார்கள்.

விசாரிக்க வேண்டும்
நெல்லையில் திமுக இரண்டு அணிகளான உள்ளனர். ஒரு அணியினர் கொடுத்த புகாரில் தான் எம்பி மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி அதிமுகவை அழிக்க வேண்டுமென்றார். இன்று அவர் இல்லை அதிமுக ஆலமரம் இது காகிதப்பூ அல்ல காகிதப் பூ ஆலமரத்தைப் பற்றிப் பேச அருகதை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications