திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அ.தி.மு.க நல்லா வரணும்.. திடீரென புகழ்ந்து தள்ளிய பாஜக.வின் நயினார் நாகேந்திரன்.. ஏன் என்னாச்சு?

Google Oneindia Tamil News

நெல்லை: செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

Recommended Video

    திமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல

    உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிந்து விட்டது. தி.மு..க, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

    குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை.. டங் ஸ்லிப்பான நயினார் குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை.. டங் ஸ்லிப்பான நயினார்

    களமிறங்கிய அ.தி.மு.க

    களமிறங்கிய அ.தி.மு.க

    உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க முதன் முதலாக வேகமாக களமிறங்கி உள்ளது. ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து. பா.ம.க வெளியேறி விட்டதால், பல இடங்களில் பாஜக-அதிமுக போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டன.

    தீவிர பிரசாரம்

    தீவிர பிரசாரம்

    இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய நேற்று முதல் களமிறங்கினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    தேர்தல் ஆலோசனை கூட்டம்

    தேர்தல் ஆலோசனை கூட்டம்

    நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக சாடினார். இந்த உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எடப்பாடி பழனிசாமி சந்தேகம் கிளப்பினார். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

    காட்டாற்று வெள்ளம்

    காட்டாற்று வெள்ளம்

    இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் 'அ.தி.மு.க ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. அதிமுக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்சி. நான் உட்பட பலர் அதிலிருந்து வெளியேறி பல கட்சிகளில் இணைந்துள்ளோம். அ.தி.மு..க.வில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று கேட்டால் அது எனக்கு தெரியவில்லை.

    பா.ஜ.க.வினர் அதிருப்தி

    பா.ஜ.க.வினர் அதிருப்தி

    எது எப்படி இருந்தாலும் அதிமுக வாழ வேண்டும்; வளர வேண்டும். அதற்கான முழு அக்கறை எனக்கு உள்ளது என்று நயினார் நாகேந்திரன் பேசினார். திடீரென பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், அதிமுகவை புகழ்ந்து பேசியதால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளையில் ''இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை'' என்று பா.ஜ.க.வினர் முனுமுனுத்து சென்றனர்.

    English summary
    BJP's nainar nagendran has said ADMK will be good. that I have that concern. BJP's Nainar Nagendran praised the AIADMK and the AIADMK was happy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X