அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்
நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீனும் நீதிமன்றம் அளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் 2020-ல் பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அம்பாசமுத்திரத்தில் பணி செய்து வந்தார். இவர் மீது நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அண்மையில் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில்,விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.
இதன்படி, இன்று காலை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம் ஜோஸ், பல்வீர்சிங்கின் தனி பாதுகாவலர்கள் சதாம் உசேன், இசக்கிராஜா, கார் டிரைவர் விவேக் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 போலீசாரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகினர். தொடர்ந்து பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேரும் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் முன்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து அந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் இந்த வழக்கு விசாரணையை வெளிமாநிலத்துக்கு மாற்றக்கோரியும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்" என்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications