பல் பிடுங்கிய வழக்கு.. போலீசார் வெளியேற்றம்..நள்ளிரவு வரை நீடித்த பரபர விசாரணை.. இன்றும் நடக்கிறது
நெல்லை: பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 11 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. நெல்லை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் இந்த விசாரணையை நேற்று காலை 10 மணியளவில் உயர்மட்ட அதிகாரி அமுதா தொடங்கினார். இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, காவல் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பல்வீர் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் என பல தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா கடந்த 10 ஆம் தேதி அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் 2-வது கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. நெல்லை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் இந்த விசாரணையை நேற்று காலை 10 மணியளவில் உயர்மட்ட அதிகாரி அமுதா தொடங்கினார். விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிரான புகார்களையே முன் வைக்க வருவதால், தாலுகா அலுவலகத்தில் இருந்த அனைத்து காவல்துறையினரையும் வெளியேறுமாறு வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதானால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வெளியேறிய பிறகே அதிகாரி அமுதா தனது விசாரணையை தொடங்கினார். பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரம் விசாரணை நீடித்தது.
இதனால் நேற்று அம்பை தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மீதம் உள்ள பாதிக்கப்பட்ட நபர்கள் 3 பேரிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்று விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல் அதிகாரி பல்வீர் சிங் மீது நேற்று 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications