திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லை மாவட்டத்தில் டூவீலரில் பேரணி நடத்தி சாதனைகளை விளக்கிய பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை மாவட்டத்தில் டூவீலரில் பேரணி நடத்திய பாஜக -வீடியோ

    நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இரு சக்கர வாகனப் பேரணிகளை நடத்தி 5 ஆண்டு பாஜக அரசின் சாதனைகளை அக்கட்சியினர் பொதுமக்களிடம் விளக்கினர்.

    நெருங்கிவரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக அரசு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைய மக்கள் வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் மத்தியில் 5ஆண்டுகால ஆட்சியின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை விளக்கியும், பாஜக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து மக்களை சந்தித்து விளக்கிடும் வண்ணம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது.

    bjp cadres hold two wheeler rally in nellai district

    அதன்படி இன்று தென்காசி சட்டமன்ற தொகுதி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் இருசக்கர வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள் 5 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

    bjp cadres hold two wheeler rally in nellai district

    கடையநல்லூர் சட்டமன்றத்தொகுதி செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பாஜகவினரின் பேரணி செல்லும் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் வாகனங்கள் அணிவகுத்து சென்ற வண்ணம் உள்ளன.

     பிரச்சாரம் அனல் பறக்கிறது... 13ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி பிரச்சாரம் அனல் பறக்கிறது... 13ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

    bjp cadres hold two wheeler rally in nellai district

    இருசக்கர வாகனங்களில் செல்லும் பாஜகவினர் அந்தந்த பகுதிகளில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் பாஜக அரசினுடைய 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும் தற்போது பாஜக அரசு என்னென்ன மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறித்தும் சிறப்புரையாற்றி சென்ற வண்ணம் உள்ளனர்.

    English summary
    BJP cadres conducted a Two wheeler rally in Two assembly constituencies in Nellai dt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X