ஜெயக்குமார் உடல் கிடந்த பகுதியில் சல்லடை போட்ட “டவர் டம்ப்”.. மொத்தமாக இறங்கிய டீம்.. பரபர நெல்லை!
நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டு 41 நாட்களாகியும் இன்னும் துப்பு துலங்காத நிலையில், கரைசுத்துப்புதூரில் உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐ.ஜி.அன்பு, எஸ்.பி முத்தரசி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 4ஆம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் 4 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக தெரியவந்தது.

சிபிசிஐடி விசாரணை: ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி, விசாரணை அதிகாரியாக இருந்து வருகிறார். ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமார் உடல் கைப்பற்றப்பட்ட கரைசுத்துபுதூரில் நேரில் சென்று பல கட்ட ஆய்வுகளை நடத்தினர்.
மேலும் சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி ஏற்கனவே சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து ஜெயக்குமார் குடும்பத்தினர் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் சென்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
டம்ப் டவர்: மேலும் சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி ஏற்கனவே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து ஜெயக்குமார் குடும்பத்தினர் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் சென்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
குற்றங்களின்போது சந்தேக நபர்களை அடையாளம் காண இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சந்தேகப்படும் நபர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.
ஒரே நாளில் நெல்லையில் திரண்ட சிபிசிஐடி அதிகாரிகள்: இந்நிலையில் சிபிசிஐடி முத்தரசி இன்று நெல்லைக்கு வந்தார். தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியான ஆய்வாளர் உலக ராணி உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் மற்றும் ஐஜி அன்பு ஆகியோரும் இன்று ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரிக்க நெல்லை வந்துள்ளனர். மேலும் ஜெயக்குமார் உடல் எடுக்கப்பட்ட கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்
41 நாட்கள் ஆகிவிட்டது: ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் 10 தனிப் படைகள் அமைத்து விசாரித்தும் துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர். ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டு 41 நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் வீடு, உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டம் உள்ளிட்ட இடங்களில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று சிபிசிஐடி உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு இருப்பதால் ஜெயக்குமார் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications