2 மனைவிகள், 2 காதலிகள், ஒரு சிறுமி.. மலையடிவாரத்தில் சிக்கிய இளைஞன்.. தட்டி தூக்கிய போலீஸ்
சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைதானார்
நெல்லை: இளைஞர் ஒருவர் 2 மனைவிகள் இருந்தும்,10ம் வகுப்பு மாணவியையும் சேர்த்து நாசம் செய்துள்ளார்.. இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்... இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. எனினும், முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
2 மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்த ஸ்டீபன், திடீரென 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக ஆரம்பித்தார்.. அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

காதல்
வெகுளித்தனமாக பழகி அந்த சிறுமியிடம், ஒருகட்டத்தில், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.. இந்நிலையில்தான், ஒருநாள் ஸ்கூலுக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.. சாயங்காலம் நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், பதறிப்போன பெற்றோர், அக்கம்பக்கம் எல்லாம் தேடினர்.. இறுதியில் பணகுடி ஸ்டேஷனில் புகார் தந்தனர்..

சிறுமி
போலீசாரும் அதன்பேரில் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், ஸ்டீபனுடன் சிறுமி அந்த பகுதியில் சுற்றி திரிந்ததும், இவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் இருந்ததும் தெரிய வந்தது... ஆனால், இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு ஏற்கனவே தெரியுமாம்.. உடனே மகளை கண்டித்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், ஸ்டீபனுடன் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.

மலையடிவாரம்
இதையடுத்து, 2 பேரையும் போலீசார் தேட தொடங்கினர்.. அப்போது நாகர்கோவில் மலையடிவாரத்தில் இருவரும் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.. அங்கு விரைந்து சென்று பார்த்ததில் சிறுமியுடன் ஸ்டீபன் குடும்பமே நடத்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. உடனடியாக ஸ்டீபனை ஆன் தி ஸ்பாட்டில் போலீசார் கைது செய்தனர்.. சிறுமியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

2 பெண்கள்
இது சம்பந்தமாக ஸ்டீபனிடம் தொடர் விசாரணை நடத்தியபோதுதான், ஸ்டீபன் மேலும் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ளாமல், அவர்களுடனும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.. இந்த சம்பவம் பணகுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications