கரெக்ட்டா.. தாலி கட்டும் நேரத்தில்.. "கசமுசா" பெண்.. விழித்த மாப்பிள்ளை.. ஓடைக்கரையில் என்ன நடந்தது?
இளம்பெண்ணை கொன்ற 2 இளைஞர்களை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்
நெல்லை: கரெக்ட்டா தாலி கட்டும் சமயத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என்றாலும், அதற்கடுத்து நடந்த சம்பவங்கள்தான் நெல்லையை உலுக்கி எடுத்துவிட்டது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி.. 23 வயதாகிறது.. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ்க்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர்..
கடந்த செப்டம்பர் 1 -ம் தேதி திருமணத்துக்கு நாளும் குறித்தனர்.. கல்யாண வேலைகள் மண்டபத்தில் தடபுடலாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், இசக்கிலெட்சுமியை காணோம்..

மாயம் - பெண்
இதனால், பதறிப்போன பெற்றோர், எங்கெங்கோ தேடியும் கிடைக்காததால், கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் தந்தனர்.. இதனால், தாலி கட்ட தயாராக இருந்த, மாப்பிள்ளை வெங்கடேஷ், அதே செப்டம்பர் 1 -ம் தேதி, வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினார். இதற்கு பிறகுதான், இசக்கிலெட்சுமியின் காதல் விவகாரம் அனைவருக்கும் தெரியவந்தது.. ராம்குமார் என்பவரை இசக்கிலெட்சுமி காதலித்து வந்த நிலையில், அவருடன்தான் திருமணத்தன்று மதுரைக்கு ஓடிப்போய்விட்டார்..

தாலி கட்டும்போது..
இசக்கிலெட்சுமியும் ராம்குமாரும் மதுரையில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.. சென்னையில் வந்து 2 நாட்கள் தங்கியிருக்கிறார்கள்.. ஆனால் 2 நாட்களுக்குள்ளேயே ராம்குமாருடன் இசக்கிலெட்சுமிக்கு ஏதோ தகராறு வந்துவிட்டது.. அதனால், இசக்கிலெட்சுமி கோபித்துக் கொண்டு, கடந்த 6ம்தேதி தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார் இசக்கிலெட்சுமி.. அப்போது இசக்கிலெட்சுமியை 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்து தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள துப்பாக்குடியிலுள்ள காட்டுப்பகுதி ஓடைக்கு அழைத்துச்சென்றனர்.

சடலம்
அங்கே அவரது கழுத்தை அறுத்து கொலையும் செய்துள்ளனர். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர்.. கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்த் 22, மற்றும் அவரது உறவினர் சிவா 19, ஆகிய 2 பேரையும் இந்த கொலை தொடர்பாக போலீசார் கைது விசாரணையும் நடத்தினர்... விசாரணையில் பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளன.. அதாவது இசக்கிலெட்சுமிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட வெங்கடேஷின் சகோதரர்தான் இந்த ஆனந்த் என்பவராம்..

வெங்கடேஷ்
இதுகுறித்து வெங்கடேஷ் தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லும்போது, "என்னுடைய அண்ணன் வெங்கடேசுக்கும் இசக்கிலட்சுமிக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத்தன்று இசக்கிலட்சுமி, வேறு ஒருவரை திருமணம் செய்து எங்களை அவமானப்படுத்திவிட்டார்... என் அண்ணனுக்கு வேறு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தோம்.. ஆனால், ஓடிப்போன காதலனுடன் இசக்கிலெட்சுமிக்கு தகராறு ஏற்படவும், என் அண்ணனுக்கு போன் செய்து பேசி உள்ளார்.. என் அண்ணனை மறுபடியும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.

சாய்ஸ் 2
அண்ணனுக்கு, வேறு பெண்ணுடன் திருமணம் ஆனது தெரிந்தும்கூட, அவருடன் சேர்த்து வைக்க சொல்லி என்னுடைய உதவியை இசக்கிலட்சுமி நாடினார்.. இந்த பெண்ணால் மறுபடியும் என் அண்ணனின் புதுவாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படும், மறுபடியும் அவமானம் ஏற்படும் என்று நினைத்துதான், இசக்கிலட்சுமியை தீர்த்துக்கட்டினேன் என்று தெரிவித்துள்ளார். மாப்பிள்ளையை விட்டுவிட்டு, ஓடிப்போய் காதலனை கல்யாணம் செய்து கொண்டு, 2 நாளில் காதலனை விட்டுவிட்டு மறுபடியும் மாப்பிள்ளையை தேடி வந்துள்ளார் இசக்கிலட்சுமி..!












Click it and Unblock the Notifications