ஆட்டோ டிரைவருடன் மகள் காதல்! ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை
ஆட்டோ டிரைவரை காதலித்த மகளை வெட்டிய அப்பா, அதை தடுக்க வந்த மனைவியையும் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் சங்கரன் கோவில் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: சாதி மாறி காதலித்த மகளை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. ஆட்டோ டிரைவரை காதலித்த மகளை கண்டித்த தந்தை, காதலுக்கு ஆதரவாக இருந்த மனைவியையும் வெட்டி சாய்த்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிபோதையில் நடந்த கொலை என்று கூறப்பட்ட நிலையில் காதலுக்காக நடந்த கொலை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நெற்கட்டும் சேவலில் பிறந்த சமுத்திரபாண்டியனுக்கு வெள்ளைத்துரச்சி என்ற மனைவியும் சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். பெங்களூருவில் வேலை செய்து வந்த சமுத்திரபாண்டியன் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். மகள் சிவரஞ்சனி பிளஸ் டூ முடித்துள்ளார்.

உறவினரான ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார் சிவரஞ்சனி.
மகளின் காதலை கண்டித்துள்ளார் சமுத்திரபாண்டியன் ஆனால் அவர் கேட்கவில்லை. தனது காதலருடன் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். மகளின் காதலுக்கு வெள்ளைத்துரச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க நினைத்தார் சமுத்தரபாண்டியன். ஆனால் வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.
செவ்வாய்கிழமை வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த சமுத்திரபாண்டியன், மனைவி, மகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது. ஆத்திரமடைந்த சமுத்திரபாண்யன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டினார் இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். மகளையும் விடாமல் வெட்டினார் இதில் காயமடைந்த சிவரஞ்சனியை சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் கவலைகிடமாக முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆத்திரத்தில் கொலை செய்த சமுத்திரபாண்டியன் நேராக கையில் அரிவாளுடன் புளியங்குடி காவல்நிலையத்தில் போய் சரணடைந்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications