ராகுல் காந்தி வந்ததுமே பாருங்க.. வானத்தை காட்டி பேசிய கனிமொழி! கூட்டத்தில் ஆரவாரம்!
நெல்லை: நெல்லை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்ததையொட்டி, வெயில் தணிந்து வானமே குடை விரித்துள்ளது எனப் பேசினார் கனிமொழி.
நெல்லையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வருகை தந்தார். பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு வந்த ராகுலை காங்கிர மற்றும் திமுக கூட்டணி நிர்வாகிகள் வரவேற்றனர்.

நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கொக்கரிக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்டுள்ள யுத்தம் தான் இந்த தேர்தல் என ராகுல் காந்தி உரையாற்றினார்.
முன்னதாக, இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கனிமொழி உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தியை வரவேற்றுப் பேசிய கனிமொழி, "இந்திய நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி இங்கு வந்திருக்கிறார். தமிழ்நாடு எப்போதுமே உங்களை வரவேற்க காத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை அதிகம் நேசிப்பவர்கள்.

அதற்கு ஒரு உதாரணம், காலையிலிருந்து தகித்துக் கொண்டிருந்த வெயில் கூட ராகுல் காந்தி இங்கு கால் வைத்ததுமே தற்போது பூங்காற்றாக மாறி இங்கு குடை பிடித்துக் கொண்டிருக்கிறது" என ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டினார் கனிமொழி.
தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி, "தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை கிடையாது. கேள்வி கேட்பவர்களை சிறைக்கு அனுப்பும் கட்சிதான் பாஜக. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" எனப் பேசினார் கனிமொழி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications