நெல்லை முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் திமுக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

DMK youth executive hacked to death by mysterious persons near Nellai

இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள அவரது கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர் . இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. நெல்லை மருத்துவமனைக்கு உடல் வந்ததது. மருத்துவமனையில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் , மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் , சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கோதைஆலடி அருணா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் , மற்றும் நிர்வாகிகள் வந்து பார்த்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர் .

இதுதொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன , என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . முக்கூடல் , அரியநாயகிபுரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+