Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினகரனால் எனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நெல்லை: அ.தி.மு.கவில் இணைகிறார் இசக்கி சுப்பையா .! அமமுக தலைமை அலுவலகம் பறிபோகிறது!

    நெல்லை: டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய போகிறோம் என்று இசக்கி சுப்பையா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

    தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமமுகவின் மிக முக்கியமான நிர்வாகியான இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது.

    இதையடுத்து, அமமுகவின் கூட்டங்களில் பெரிசாக இசக்கி சுப்பையா தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் உடன் குற்றாலத்தில் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினார்.

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    இதனால் அதிமுகவில் விரைவில் சேர போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இந்த சூழலில்தான் நேற்று அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று தகவல் பறந்தன. மற்றொரு புறம் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக பக்கம் சேர அழைக்கிறார் என்றும் கூறப்பட்டது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அமமுகவில் இருந்து விலகி தாய்க்கழகத்தில் இணைவதாக இசக்கி சுப்பையா அறிவித்துள்ளார். இன்று தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இசக்கி சுப்பையா டிடிவி தினகரன் மீதான தனது கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அப்போது அவர் சொன்னதாவது:

    அம்மாதான்

    அம்மாதான்

    "இவரால்தான் நான் அடையாளம் காணப்பட்டேன் என்று சொல்லி வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தால் அடையாளம் காணப்பட்டவன் நான். 2011ல் என்னை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயலலிதா. என்னை வளர்த்ததும், எனக்கு பொறுப்பு தந்து அழகு பார்த்ததும் அம்மாதான். என் மாவட்ட மக்களால்தான் நான் உயர்ந்தேன்.

    பதட்டம்

    பதட்டம்

    தினகரனின் பேட்டியால் நான் வருத்தம் அடைந்தேன். என்னை எப்படி அவர் விமர்சிக்கலாம்? நான் குறைந்த நாள் தான் அமைச்சராக இருந்ததாக கிண்டல் செய்யும் வகையில் பேசுகிறார். டிடிவி தினகரன் மிகுந்த மன பதட்டத்தில் இருக்கிறார். அதனால் நிகழ்வுகளை மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அவரால், எங்களது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மாணிக்கராஜா பெயரை கேட்டாலே டிடிவி தினகரன் பதறுகிறாரே ஏன்? ரகசியங்களை வெளியிடுவது தலைவர் பதவிக்கு அழகல்ல.

    6-ம் தேதி

    6-ம் தேதி

    தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி விளங்குகிறார். எப்போது வரப்போகிறீர்கள் என்று எங்களிடம் நேரம் கேட்கும் அளவுக்கு பெருந்தன்மையாக இருக்கிறார். நாங்கள், எங்கள் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேருடன் அதிமுகவில் இணைய உள்ளோம். இதற்காக தென்காசியில் வரும் 6ஆம் தேதி பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது. அப்போது முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தாய்க்கழகத்தில் இணைய போகிறோம்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+