திருநெல்வேலியில் நற்செய்தி.. இன்று முதல் நெல்லை மாஞ்சோலை செல்லலாம்.. தடையை நீக்கி மக்களுக்கு அனுமதி
திருநெல்வேலி: இன்று முதல் மாஞ்சோலை சுற்றுலா தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது... தொடர் மழை காரணமாக 8 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்திருக்கிறது.. இதன்காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

மாஞ்சோலை: எனவே, வரலாறு காணாத அளவுக்கு தேயிலை தோட்ட கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் மழை பதிவாகியிருந்தன..
அந்தவகையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்தே, நாலு மூக்கு பகுதி, ஊத்து பகுதி, காக்காச்சி பகுதி, மாஞ்சோலை பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழைப்பதிவாகியிருந்தது.. மேற்கண்ட பகுதிகளில் இயல்பாக பெய்யும் மழையைவிட அதிகமாக மழை பெய்தது.. எனவே, தொடர் கனமழை காரணமாக இந்த மலை கிராமங்களுக்கு செல்ல கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த ஜூன் 28ம் தேதி முதல் வனத்துறை தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள்: நீர்வரத்து அதிகமானதையடுத்து மணிமுத்தாறு அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் மணிமுத்தாறு சோதனை சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.. எனினும், தொடர் மழை காணரமாக, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மாஞ்சோலைத் தேயிலை தோட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் சூழல் சுற்றுலாச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் மாஞ்சோலை செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
அனுமதி: இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அம்பாசமுத்திரம் வனச்சரகம், மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில்பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் மாஞ்சோலை சூழல் சுற்றுலாசெல்ல தினமும் 10 வாகனங்களுக்கு (காா்) மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது" என்று அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications