செருப்பை கழற்றி பெண்ணை அடிக்க முயன்ற பஸ் டிரைவர்.. நடுவழியில் இறக்கி விட்டு அராஜகம்.. வீடியோ
பெண் பயணியை தாக்கி உள்ளார் அரசு பஸ் டிரைவர் ஒருவர்
தென்காசி: அரசு பஸ்ஸில் பெண் பயணி ஒருவரை செருப்பால் அடிக்க முயன்றதோடு, ஆபாச வார்த்தைகளில் டிரைவர் பேசிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து ஆலங்குளம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அதில் 20-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்..
அப்போது திடீரென பஸ்ஸை பாதி வழியில் டிரைவரும் கண்டக்டரும் நிறுத்தி உள்ளனர்.. ஒரு பெண்னை பாதி வழியில் இறக்கியும் விட்டுள்ளனர்...

பயணிகள்
இதை பற்றி கேட்டதற்கு, பஸ் அதுக்கு மேல் போகாது என்றும், பயணிகள் எல்லாருமே நடந்து செல்லுங்கள் என்று டிரைவர் முப்பிடாதி முத்து சொல்லி உள்ளார்.. இதனால் அதிர்ச்சியான பயணிகள் பஸ்ஸில் இருந்து கீழே இறங்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.. அதில் ஒரு பெண் மட்டும், டிரைவரிடம் இதை பற்றி வாக்குவாதம் செய்தார்.. அதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர், அப்பெண்ணை செருப்பால் அடிக்க முயன்றுள்ளார்.. இந்த காட்சிதான் வீடியோவாக வெளியாகி உள்ளது.

டிரைவர்
டிரைவர் தன் மகளை பாதிவழியில் இறக்கி விட்டு நடந்து செல்லுமாறு சொல்கிறார் என்றும், தன் பிள்ளையையும் இது போல் நடந்து செல்லுமாறு டிரைவர் நடுவழியில் இறக்கி விட்டுள்ளார் என்றும் பஸ்ஸில் பயணம் செய்த பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.. இந்த வாக்குவாதம் நடந்தபோதுதான், மற்றொரு பெண் நடந்த சம்பவம் அனைத்தையும் வீடியோவாக தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த டிரைவரிடம், பெண் பயணிகள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

சடங்கு
வீடியோவில் அந்த பெண், "சடங்கான பெண்னை நடுகாட்டில் இப்படி இறக்கி விடறது சரியா? எல்லாரையும் இப்படி நடந்து செல்லுமாறு சொல்றதும் சரியா? என்று கேட்கிறார்.. அதற்கு டிரைவர், நான் அப்படித்தான் செய்வேன்.. இஷ்டம் இருந்தால் நடந்து போ என்கிறார்.. இன்னொரு பெண்ணோ, ஏன் பாதியில் இறக்கி விட்டீங்க என்று கேட்டுகொண்டிருக்கும்போதே, திடீரென டிரைவர் முப்பிடாதி முத்து, தன்னுடைய செருப்பை கழற்றி அந்த பெண்னை அடிக்க போவதுபோல் முயற்சிக்கிறார்.

ஆபாச பேச்சு
தொடர்ந்து, அந்த பெண்ணின் கையை முறுக்கி பிடித்து அடிக்கவும் செய்கிறார்.. அவரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாகவும் திட்டுகிறார். .. இதனால் பஸ்ஸில் பதற்றம் அதிகரிக்கிறது.. ஒருகட்டத்தில் டிரைவர் தன்னுடைய சீட்டில் போய் உட்கார்கிறார்.. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications