நெல்லை அதிமுக அடையாளம்.. நாங்குநேரி மாஜி எம்எல்ஏ மாணிக்கராஜ் காலமானார்.. வீட்டிலேயே பிரிந்தது உயிர்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தற்போது அவருக்கு வயது 71.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கராஜ்... இவர் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்.. நீண்ட காலமாகவே கட்சிக்காக திறன்பட செயல்பட்டு வருபவர்..

இவரது தீவிரமான செயல்பாட்டுக்காகவே, கடந்த 2001 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாங்குநேரி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தார்.. அந்த தேர்தலிலேயே நாங்குநேரி தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு பிறகு, அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார் மாணிக்கராஜ்.. தென் மண்டலத்தில் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்..
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜ். ஆனால், அதிமுகவில் கடந்த சில வருடங்களாகவே, ஏற்பட்டு வரும் குழப்பங்களால், அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.
71 வயதான மாணிக்கராஜ், உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.. வீட்டில் இருக்கும்போதே அவரது உயிர் பிரிந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்..
அதிமுகவின் மூத்த தலைவரின் மறைவு, நெல்லை அதிமுகவுக்குள் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மாணிக்கராஜ் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications