அரசு பேருந்தில் சீட்டுக்கு கீழே துப்பாக்கி, அரிவாள்.. நெல்லையில் ‘பகீர்’.. போலீசார் பரபர விசாரணை!
நெல்லை: சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து இன்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது.

நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் இன்று அரசு விரைவுப் பேருந்தை சுத்தம் செய்யும்போது, படுக்கை சீட்டுக்கு அடியில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில், சீட்டுக்கு அடியில் துப்பாக்கி, அரிவாள் வைத்தது யார், சமூக விரோத செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் அந்த பேருந்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
துப்பாக்கி மற்றும் அரிவாள் இருந்த அந்த சீட்டில் பயணம் செய்தவர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்தில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications