Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செத்துடலாம்னு இருக்கேன்".. உருகிய நெல்லை கண்ணன்.. மறக்க முடியாத தமிழ்க்கடல்.. இதோ ஒரு இனிப்பு செய்தி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை கண்ணன் நினைவிருக்கிறதா? மறக்க முடியாத தமிழறிஞரான நெல்லை கண்ணன் நினைவாக, மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன அது?
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்..

பேச்சாளர்: மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தையே மொத்தமாக கரைத்து குடித்தவர். ஆன்மிக சொற்பொழிவில் பேசும்போதே "அவன், இவன்" என்று குறிப்பிட்டுத்தான், பொதுவெளியில் நெல்லை கண்ணன் பேசுவார்... ஆனாலும், அவரது தமிழ் இனிக்கும்..

Happy News from Nellai Corporation and town road in honor of the Great personality late Nellai Kannan

அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தைஅதிகப்படுத்த, அதற்காக மும்முரமாக உழைத்தவர் நெல்லை கண்ணன் ஆவார்.. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி நடத்திய, "தமிழ் பேச்சு.. எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து அசத்தியவர்.. இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் எண்ணற்ற தமிழ்ப்பற்றாளர்களை உருவாக்க காரணமாக இருந்தது..

குன்றக்குடி அடிகளார்: இவர் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும், எந்த மேடையில் பேசினாலும், காமராஜரின் புகழை பேசாமல் இருந்ததே கிடையாது.. குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர்... எனினும், எந்த அளவுக்கு இவர் தமிழால் அறியப்பட்டாரோ, அந்த அளவுக்கு விமர்சனங்களிலும் சிக்கினார் என்பதை மறுக்காமல் ஏற்க வேண்டும்.

அதேமசயம், கருணாநிதி மீது எதிர்ப்பு கொள்கை மிக்கவர்.. கலைஞரை நிறைய விமர்சித்து வந்ததுடன், ஒரு நாளிதழில் அதை பற்றி ஒரு தொடர் கட்டுரையே எழுதியவரும்கூட.. 1996-ம் ஆண்டில் கலைஞரை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்.. ஆனால், அதிமுகவுக்காக இவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திமுகவை எந்த அளவுக்கு சரமாரியாக விமர்சித்தார் என்பதை திமுக தொண்டர்கள் இப்போதுவரை மறக்கவில்லை.

கலைஞர் கைது: அதிலும், கலைஞர் கைதாகியபோது, "அய்யோ கொல்றாங்க, கொல்றாங்க" என்று எழுப்பிய சப்தத்தையும், கூக்குரலையும் கிண்டல் செய்தும் பேசினார்.. திமுகவை மட்டுமல்லாமல், காங்கிரஸையும் தாறுமாறாக விமர்சித்தவர். ஆனாலும், அரசியல் நிலைபாடுகளில் மட்டும் நெல்லை கண்ணன் உறுதிப்பிடிப்புடன் இல்லாதது அவரது ஆதரவாளர்களுக்கு எப்போதுமே வருத்தம்தான்..

கால சக்கரம் வேகமாக சுழன்றது.. நிறைய அனுபவங்கள் நெல்லை கண்ணனிடம் மெல்ல மெல்ல குடியேறியது.. மனஸ்தாபங்கள் விலகி, கரிசனங்கள் கூடின.. அந்த சமயத்தில்தான், ஸ்டாலின் முதல்வரானார்.. நெல்லை கண்ணனின் இயல்பும் அடியோடு திரும்பியது.. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, ஸ்டாலினையும், திமுகவையும் மாறி மாறி பாராட்டிக் கொண்டு இருந்தார்..

"காமராஜரைப்போல் முழு நல்லவனாக உருவாகிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து அவர் கூடவே எப்பவும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று நா தழுதழுக்க சொன்னார்.

திருமாவளவன்: அதுமட்டுமல்ல, விசிக விழா ஒன்றில், "இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் முதல்வரே., திருமா நீங்களும் உங்கள் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதல்வராக பதிவேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றவுடன் உங்கள் துணைவியார் கண்கலங்கினாரே, அப்போது நானும் அழுதுவிட்டேன் நீங்கள் ரொம்ப காலம் வாழவேண்டும்" என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

இதற்கு பிறகு, பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. "79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை? இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன். மரணம் தானே உறுதி" என்று நெல்லை கண்ணன்" என்று உருக்கமாக கூறியிருந்தது அனைவரையும் கலங்கடித்தது..

பரபரப்புகள்: எத்தனையோ சர்ச்சைகள், பரபரப்புகளை இவர் ஏற்படுத்தினாலும், அவரது தமிழுக்கு, மாற்றுக்கட்சியினரும் ரசிகர்களாக இருந்ததே, இவரது ஆகச்சிறந்த சாதனை.. திமுக காலம் முழுக்க திமுகவுடன் மல்லுக்கட்டி வந்தபோதிலும், கடைசி கட்டத்தில், அவரது உருக்கமான பேச்சும், நெகிழ்ச்சியான வார்த்தைகளும், திமுக மீதான அதிருப்தியை போக்கி, குளிர வைத்தது என்றே சொல்லலாம்..

இதோ இப்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. டவுண் குறுக்குத்துறை ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என்று பெயர் சூட்டி உள்ளனர். முன்னதாக, நெல்லை கண்ணனின் நினைவாக கோவில்பட்டியை சேர்ந்த கரிசல இலக்கிய அமைப்பினர் தலைவர் ராஜகோபால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மாநகர மேயரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை தந்திருந்தனர்.

தீர்மானம்: அதில், தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட இலக்கியவாதி நெல்லை கண்ணன் அவர்களின் பெயரை நெல்லை மாநகர சாலை அல்லது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.. உடனே மேயரும், இதை அரசுக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று தருவதாக உறுதி தந்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேற்கண்ட சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதை கேள்விப்பட்டு நெல்லை கண்ணன் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், தமிழகத்தின் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சி: எத்தனையோ சர்ச்சைகள், பரபரப்புகளை இவர் ஏற்படுத்தினாலும், அவரது தமிழுக்கு, மாற்றுக்கட்சியினரும் ரசிகர்களாக இருந்ததே, இவரது ஆகச்சிறந்த சாதனை.. நெல்லை கண்ணனின் நற்றதமிழ் கடலில், இந்த மாநிலமே என்றென்றும் விழுந்தும், மூழ்கியும் கிடக்கும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+