திருச்செந்தூர் அருகே தனியார் ஆக்கிரமித்த பல கோடி ரூபாய் நிலம்.. அதிரடி காட்டிய அறநிலையத்துறை
நெல்லை: திருநெல்வேலி அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக மீட்டுள்ளது. நெல்லை - திருச்செந்தூர் சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்களுக்கு சொத்துக்களும் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சமீப காலமாக இதுபோன்ற ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை தயவுதாட்சண்யம் இன்றி அறநிலையத்துறை மீட்டு வருகிறது.

பொதுவாகவே, கோவில் நிலத்திலோ அல்லது நீர்நிலையை ஒட்டிய ஆக்கிரமிப்பு நிலங்களை வாங்கி குடியேறவோ கூடாது. கோவில் நிலங்கள் என்றால் பட்டா பெற முடியாது. எனவே பத்திர பதிவு செய்தாலும் கூட என்றாவது ஒரு நாள் கோவில் நிலம் என்று கூறி அறநிலையத்துறை நிச்சயம் வாங்கிவிடும். இருந்தாலும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்களும் அதை வாங்கி பின்னர் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் என்ற ஊர் உள்ளது. நெல்லை - திருச்செந்தூர் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊரில், கிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலில் கிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானையுடன், தட்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ள இந்தக் கோவிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம், திருச்செந்தூர் சாலையையொட்டி இருக்கிறது. திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சாலை என்பதால், இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 5 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது.
இதையடுத்து அதை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தை நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் நிலத்தை மீட்டனர். மேலும் நிலத்தை வேறு யாரும் ஆக்கிரமிக்க முடியாதபடி சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. தனியார் ஆக்கிரமித்து இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டதால் கோவில் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications