ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை.. நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை எஸ்பி அருண் பேட்டி
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் எஸ்பி அந்தஸ்தில் கமாண்டராக பணியாற்றி வந்தவர், அருண். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் அவர் பதவி விலகி உள்ளார். பதவி விலகுவதற்கான காரணம் குறித்து அருண் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. எனினும் ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண், இவர் குரூப் 1 தேர்வில் வென்று கடந்த 2012ம் ஆண்டு டிஎஸ்பியாக தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். டிஎஸ்பியாக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த அருண், அடுத்த சில ஆண்டுகளில் கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக தொடர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

மணிமுத்தாறு சிறப்பு காவல்படை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்த அருணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. அவர், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் கமாண்டராக எஸ்பி அந்தஸ்தில் பணி நியமனம் செய்யப்பட்டார். அதேநேரம் அவருடன் பணியில் சேர்ந்த சக அதிகரிகளான கார்த்திக், சங்கு ஆகியோருக்கு எஸ்பி அந்தஸ்தில் பதிவு உயர்ந்து கிடைத்தது. அவர்கள் சென்னையில் துணை கமிஷனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
பணியில் இருந்து விலகல்
ஆனால், காவல் அதிகாரி அருண் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் காமாண்டராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான், அவர் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னுடைய உயர் அதிகாரிகளான ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் ஆகியோரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார்.
கடிதம் அனுப்பிய அருண்
அருண் எழுதியிருந்த கடிதத்தில், 'தனக்கு வேலை பிடிக்கவில்லை. அதனால் விலகுகிறேன்' என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமனும் ஐ.ஜி. விஜயகுமாரியும் அருணிடம் சமாதானம் செய்ததாக செய்திகள் அப்போது வெளியாகின.. அவர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என்றும் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு அந்த கடிதத்தை அனுப்பாமல் தொடர்ந்து சமாதானம் பேசி வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனிடையே காவல் அதிகாரி அருண் சென்னை கோட்டையில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்தும் அண்மையில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
நேற்று கடிதம் வழங்கல்
அதன்பிறகு, டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும், அவரை நேரடியாக அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என அருண் உறுதியாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் அதிகாரி அருணின் ராஜினாமா கடிதத்தை ஏற்று தமிழக அரசு கடந்த ஜூன் 15ம் தேதி உத்தரவிட்டது. அரசு உத்தரவு நகல் அருணிடம் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது.
13 ஆண்டுகள் வேலை
பதவி விலகியது குறித்து காவல் அதிகாரி அருண் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக எந்த பதிலும் அறிவிக்கவில்லை. எனினும் அவர் கூறும் போது, தமிழ்நாட்டு காவல் துறையில் அதிகாரியாக 13 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.. இனி எல்லாம் முடிந்துவிட்டது, அரசு உத்தரவும் கிடைத்துவிட்டது, இனி இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. என்றார்.
ஜோக்கராக நீடிக்க விரும்பவில்லை
செங்கல்பட்டு மாவட்டம் எனது சொந்த மாவட்டம் என்று கூறிய அருண், ஆசையாகத்தான் காவல் பணியில் சேர்ந்ததாகவும், எவ்வளவோ மனக்கசப்புகள் உள்ளது என்றும் அதை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை என்றும், ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் ஊடகத்திடம் மறுத்துவிட்டார். தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இந்த பரந்த உலகத்தில் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்புவதாகவும், தனது மனைவி மற்றும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications