பிரபல கேரள ஜோதிடர் 'பூஜை' என்ற பெயரில் 16 வயது சிறுமியிடம்.. அறையில் 2 மணி நேரம்.. ஆடிப்போன பெற்றோர்
திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் - புத்தூரில் நடந்த சம்பவம் நம்மை உலுக்கும் அளவுக்கு மோசமானது, "பூஜை" என்ற பெயரில் 16 வயது சிறுமியை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அத்துமீறியதாக முராரி தந்திரி என அழைக்கப்படும் ராஜன் பாபு என்ற பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அறையில் இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த "பூஜை அறை" உண்மையில் ஒரு பெட் ரூம் என்றும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த குழந்தை தனியாக அடைக்கப்பட்டிருந்தாள் என்றும் தாயின் எதிர்ப்பை கூட, குற்றவாளியின் மனைவியும் தாயும் சேர்ந்து சமாதானப்படுத்த முயன்றார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளா மாநிலம் கொல்லத்தை அடுத்த அரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் முராரி தந்த்ரி என்ற ராஜன் பாபு. இவருக்கு 54 வயது ஆகிறது. பிரபல ஜோதிடர். இவரிடம் ஜோதிடம் பார்க்க சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அவரது ஜோதிட நிலையத்துக்கு வருவது வழக்கமாக உள்ளது. அதுபோல சம்பவத்தன்று கொல்லம் புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் ராஜன் பாபுவிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், பேயை ஓட்ட மந்திரவாதம் நடத்தலாம் எனவும் கூறினாராம். இதை நம்பிய அந்த பெண் நேற்று முன்தினம் தனது மகளை ஜோதிடர் ராஜன் பாபுவின் ஜோதிட நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை மட்டும் ஜோதிடர் தனி அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த சிறுமி வெளியே வராததால் சிறுமியின் தாய் அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது அந்த சிறுமி அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மகளிடம் என்னவென்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுமி தன்னை பாலியல் ரீதியாக ஜோதிடர் அத்துமீற முயன்றதாக கூறினார். இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஜோதிட நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனே ஜோதிடர் ராஜன்பாபு ஜோதிட நிலையத்தின் பின்புறம் வழியாக தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன்பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பரணிக்காவு கோவிலில் வைத்து ராஜன்பாபுவை போலீசார் போக்சோ பிரிவில் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications