குடும்பம் நடத்த வா.. புதருக்குள் கூட்டி கொண்டு போய்.. துண்டாக வெட்டி எடுத்த சொரிமுத்து.. நெல்லை ஷாக்

நெல்லையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குடும்பம் நடத்த வா என்று, புதர் பக்கம் ரமலத்தை அழைத்து கொண்டு போய், அங்கே மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையை துண்டாக வெட்டி எடுத்தார் கணவர் சொரிமுத்து.. கள்ளக்காதல் விபரீதத்தினால் இந்த வெறிச்செயல் நடந்துள்ளது நெல்லையை உறைய வைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்துள்ளது குறிச்சிகுளம் என்ற ஊர்.. இங்கு வசித்து வருபவர் சொரிமுத்து.. 35 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.

lockdown crime: husband murdered wife near nellai

தற்போது, கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ரமலத்.. அச்சன்புதூரை சேர்ந்தவர்.. இது ஒரு காதல் திருமணம்.. 10 வருடத்திற்கு முன்பு ரமலத்தை துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் செய்தார். இப்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

குறிச்சிகுளத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். ரமலத், குழந்தைகள் இங்குதான் உள்ளனர்.. சொரிமுத்து மட்டும் கேரளாவில் வேலைக்கு சென்று வந்துள்ளர்.. 2 மாசத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து போயுள்ளார்.

இந்நிலையில், ரமலத்துக்கும் இன்னொரு இளைஞருக்கும் லவ் பத்தி கொண்டது.. இந்த கள்ளக்காதல் விவகாரம் சொரிமுத்துவுக்கு தெரியாது.. ஆனால் சொரிமுத்துவின் உறவினர்களுக்கு அரசல்புரசலாக தெரிந்துள்ளது. கடந்த 1ம் தேதி இரவு ரம்லத்தும், அந்த இளைஞரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு சொந்தக்காரர்கள் திரண்டு வந்தனர்.. அவர்களை பார்த்ததும் இளைஞர் வீட்டின் பின்பக்கம் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ரம்லத்தை மட்டும் அதே அறையில் வைத்து பூட்டியதுடன், அவர் தப்பி ஓடிவிடாமல் இருக்க 2 பெண்களையும் காவலுக்கு வைத்தனர்.. ஆனால் ரம்லத்தோ, காவலுக்கு இருந்த 2 பேரையுமே ஏமாற்றிவிட்டு மறுநாளே அதாவது 2ம் தேதி நைட் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். சொரிமுத்து குடும்பத்தினர் எங்கெங்கோ ரமலத்தை தேடினர்.. கிடைக்கவே இல்லை.

இதையடுத்து 3ம் தேதி, சொரிமுத்துவின் சகோதரர் தாழையூத்து போலீசில் புகார் தந்தார்.. பின்னர் சொரிமுத்துவுக்கு தகவல் சொன்னார்கள். 2 நாளைக்கு முன்புதான் சொரிமுத்து ஊருக்கு வந்தார்.. அதனால் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. தொற்று எதுவும் இல்லை தெரிய வந்தது. நேற்று முன்தினம் காலை, ரமலத்துக்கு சொரிமுத்து போன் செய்து பேசினார்.

"எங்கே இருக்கே, உன்னை நான் மன்னிச்சிட்டேன்.. 2 குழந்தைங்களுக்காக நீ திரும்ப வீட்டுக்கு வரணும்.. ஒன்னா குடும்பம் நடத்தலாம் வா" என்று கூப்பிட்டார். இதை கேட்ட ரமலத்தும் குறிச்சிகுளம் வாய்க்கால் பாலம் வந்துவிடுவதாகவும், அங்கிருந்து வீட்டுக்கு போகலாம் என்றும் சொல்லி உள்ளார். சொன்னபடியே வாய்க்கால் பாலத்துக்கு ரமலத் வந்தார்.. ஆனால் அதற்கு முன்பே, பாலம் முட்புதரில் ஒரு அரிவாளை வைத்து கொண்டு ரமலத்துக்காக காத்திருந்தார் சொரிமுத்து.. ரமலத்தை பார்த்ததும் சாதாரணமாக பேசினார்.

அப்படியே முட்புதர் பக்கம் அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தார்.. இதை பார்த்ததும் ரமலத் ஓட்டம் எடுத்தார்.. பின்னாடியே சொரிமுத்து விரட்டி கொண்டே போனார்.. ஆத்திரத்துடன் ரமலத்தை ஓட ஓட விரட்டி வெட்டினார் சொரிமுத்து.. பிறகு ரமலத் தலையை ஒரே சீவாக சீவினார்.. தலை துண்டித்து போய் விழுந்தது.. இதையடுத்து தாழையூத்து போலீசில் சொரிமுத்து சரணடைந்தார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ரமலத் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய நெல்லை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. வழக்கு பதிவு செய்து சொரிமுத்துவையும் கைது செய்தனர்.. அப்போது விசாரணையில், "ரமலத்தின் கள்ளக்காதலால் எனக்கு அவமானம் தாங்கமுடியவில்லை.. அந்த ஆத்திரத்தில்தான் தலையை சீவினேன்" என்றார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாளுக்கு நாள் ஊரடங்கின்போதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ள நிலயில், இந்த சம்பவமும் நெல்லையை உறைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+