லாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி நிகழ்ந்த கோர விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குற்றாலத்தில் இருந்து இன்று அதிகாலை நெல்லை நோக்கி கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இதே போல், தூத்துக்குடியில் இருந்து கொல்லத்திற்கு சரக்கு லாரி சென்றுக் கொண்டிருந்தது. இந்தநிலையில், கார் கரும்புளியூத்து என்ற இடத்தில் சரக்கு லாரியும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்தவுடன் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உடல்களை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்த முருகன், நிரஞ்சன்குமார், ராஜசேகர் இவரது 3 வயது மகள் தனிக்கா, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என தெரியவந்தது. இவர்கள் குடும்பத்துடன் குற்றாலம் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications