மெர்சி என் கூட பேச மாட்டியா.. ஒரு தலைக் காதலில் விபரீதம்.. டீக்கடையில் ஒரு கொலை!
இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video

நெல்லை: "மெர்சி... என் கூட பேச மாட்டியா.." என்று கேட்டு டீக்கடையிலேயே அவரை கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார் அந்த இளைஞர்.
நெல்லை அருகே மயிலாடி என்ற ஊரை சேர்ந்தவர் ரவீந்திரன். வீட்டில் இவரை என்ஜினியருக்கு படிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் வள்ளியூரில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அதே கடையில்தான் தக்கலை பகுதியை சேர்ந்த மெர்சி என்பவரும் வேலை பார்த்து வந்தார். ரெண்டு பேருமே 5 மாசத்துக்கு முன்னாடிதான் அந்த கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். பார்த்தவுடனேயே ரெண்டு பேருக்குமே லவ் ஆரம்பிச்சாச்சு.

பேசுவதை தவிர்த்தார்
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ரவீந்திரன் வேலையிலிருந்து நின்றுவிட்டார். வேற எங்கேயும் வேலைக்கு போகாமல் சும்மாவே ஊர் சுற்றி வந்திருக்கிறார். இப்படி எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் வெட்டியாக சுற்றும் ரவீந்திரன் மீது மெர்சிக்கு கோபம் வந்தது. எவ்வளவு சொல்லியும் வேற வேலைக்கு போகாததால் ரவீந்திரனிடம் பேசுவதை மெர்சி குறைத்து கொள்ள ஆரம்பித்தார்.

டீக்கடைக்கு போனார்
இது ரவீந்திரனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. பலமுறை போன் செய்தாலும் மெர்சி போன் எடுப்பதில்லை. அதனால், நேற்று முன்தினம் சாயங்காலம் 6.30 மணிக்கு மெர்சியை வள்ளியூர் பஸ் ஸ்டேண்ட்-க்கு எதிரே இருக்கும் டீக்கடைக்கு வர சொல்லி இருக்கிறார். மெர்சியும் அந்த டீக்கடைக்கு போனார்.

சரமாரி குத்து
அப்போது ரவீந்திரன், "என்கிட்ட நீ பேசாமல் இருக்கிறது என்னால தாங்க முடியல.. பழைய மாதிரி நீ என்கிட்ட பேசணும்" என்றார். இதற்கு மெர்சி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் இருவருக்கும் தகராறு டீக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது. பேசவே முடியாது என்று ஒத்தைக்காலில் மெர்சி சொல்லவும், ஆத்திரமடைந்த ரவீந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சியை சரமாரியாக குத்த ஆரம்பித்து விட்டார்.

விரட்டி பிடித்தார்கள்
கழுத்து, வயிறு பகுதிகளில் மாறி மாறி குத்தினார். இதில் மெர்சி ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்தார். இதை பார்த்த டீக்கடை, மற்றும் அக்கம்பக்கத்து கடைக்கார்கள், பொதுக்கள் எல்லோருமே அதிர்ச்சியானார்கள். கண்ணெதிரிலேயே மெர்சியை குத்தி கொலை செய்வதை பார்த்த பொதுமக்களில் சிலர் தப்பி சென்ற ரவீந்திரனை பிடிக்க பின்னாடியே துரத்தினார்கள்.

மெர்சி உயிரிழப்பு
பிறகு விரட்டி பிடித்து ஆத்திரம் தீர வெளுத்தார்கள். பிறகு வள்ளியூர் போலீசுக்கு போன் செய்து ரவீந்திரனை ஒப்படைத்தனர். அதற்குள் ரத்த வெள்ளத்தில் போராடிய மெர்சியை ஒரு ஆட்டோவில் போட்டு பக்கத்தில் இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ஆனால் மெர்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

வள்ளியூரில் பயங்கரம்
இப்போது ரவீந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வள்ளியூர் பஸ் ஸ்டேண்ட் எப்பவுமே மக்கள் நடமாட்டம் இருக்கிற பகுதி. சாயங்காலம் 6.30-க்கு நெரிசல் அதிகமாகவே இருந்திருக்கிறது. இவ்வளவு பேர் இருந்தும் ஒரு டீக்கடை வாசலில் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications