‛‛மாஞ்சோலைக்கு பிரியா விடை’’.. கதறி அழுத எஸ்டேட் தொழிலாளர்கள்.. முடிவுக்கு வந்த ‛சகாப்தம்’

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: சிறந்த சுற்றுலா தலமான மாஞ்சோலை டீ எஸ்டேட் தொழிலாளர்கள் கட்டாயமாக இன்று வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்கள் கண்ணீர் மல்க மாஞ்சோலைக்கு பிரியா விடை கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று மாஞ்சோலையாகும். இந்த மாஞ்சோலை பகுதி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

manjolai tea estate tirunelveli nellai

அதாவது புண்ணிய ஸ்தலமான பாபநாசத்துக்கு மேலே உள்ள மணிமுத்தாறு, காரையாற்றை தாண்டி மலையின் உச்சியில் இயற்கை எழில் சூழ்ந்து தேயிலை தோட்டமாக மாஞ்சோலை உள்ளது. இந்த மாஞ்சோலை பகுதியை சுற்றி காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட இடங்களும் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் இந்த இடங்கள் அனைத்தும் சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட இடங்களை பிபிடிசி எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனம் குத்தகை எடுத்தது. அதாவது 1919 ம் ஆண்டு முதல் 2028 ம் ஆண்டு வரை குத்தகைக்கு அந்த நிறுவனம் எடுத்தது.

இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் சுமார் 8,373 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, காபி, ஏலக்காய் உள்ளிட்ட மேலும் சில பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அங்கு உள்ள வீடுகளில் வசித்து வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் தான் குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையே தான் மாஞ்சோலையை காப்புக்காடாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கான நடைமுறையை வனத்துறை தொடங்கி உள்ளது. இதனை காரணம் காட்டி பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்ய கூறியது. அதோடு விருப்ப ஓய்வு வழங்குவதாக அறிவித்து அதற்கான நோட்டீஸ் அனுப்பியது.

காலம் காலமாக தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.. திடீரென்று மாஞ்சோலையை விட்டு வெளியேற கூறியதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றை நினைத்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் எஸ்டேட் மற்றும் குடியிருப்பை விட்டு வெளியேற அந்த நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு என்பது இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு கடிதத்தில் கையெழுத்திட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். பல ஆண்டுகளாக பணி செய்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு வெளியேறும்போது அவர்கள் கதறி அழுதனர்.

இந்நிலையில் தான் எஸ்டேட்டை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள், ‛‛தங்களுக்கு வேறு வேலை தெரியாது. இதனால் மாஞ்சோலை எஸ்டேட்டை அரசு ஏற்று நடத்தி எங்களுக்கு மீண்டும் பணி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களின் வாழ்வாதாரத்துக்கு நிலம், வீடு தந்து உதவி செய்ய வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்னர். இதற்கிடையே தான் புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் மாஞ்சோலை டீ எஸ்டேட்டை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+