இதே வேலையாகப் போச்சு.. ’டெல்லி’ மூலம் ஆ.ராசா மீது ஆக்சன்! பரபரப்பை பற்ற வைத்த ‘தாமரை’ தலைவர்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை : திமுக எம்.பி ஆ.ராசா மீது நாடாளுமன்ற மூலமாக நடவடிக்கை எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் இது போன்ற கருத்துக்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை சட்டமன்ற தொகுதி தொடர்பான கோரிக்கைகளை மனுவாக பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் முதலமைச்சர் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான 10 கோரிக்கைகள் தெரிவிக்க அறிவுறுத்தியதன் படி மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணையை டனல் மூலம் இணைத்தால் எந்த காலத்திலும் தண்ணீர் பிரச்சனை நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வராது. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்த கருத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஆ.ராசா

ஆ.ராசா

இந்து பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் ஆ.ராசா பேசிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான மனிதரை நாட்டில் வைப்பது எப்படி என்ற அடிப்படையில் தான் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம். அனைத்து பெண்களும் பெண்களை கேவலமாக பேசிய கருத்தாக இதனை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

தக்க பதிலடி

தக்க பதிலடி

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவின் கருத்திற்கு தக்க பதிலடி கிடைக்கும். ஆ.ராசா பேசிய கருத்தை எடுத்துரைத்து பாராளுமன்றத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி ஆராசா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் பொதுமக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.

கூட்டணி தொடரும்

கூட்டணி தொடரும்

தமிழகத்தில் நடைபெற ஆட்சி பாரபட்சத்துடன் நடந்து வருகிறது. தமிழகத்தில் சமூக நீதிப் பேரளவு தான் உள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் நடந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயம். தமிழகத்தில் பாஜக இருக்கும் கூட்டணி தொடரும் தேர்தல் வரும் போது எந்தெந்த பகுதியில் போட்டி என்பது அறிவிப்போம்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+