நடுங்கவைத்த நாங்குநேரி! தங்கையுடன் பள்ளி மாணவனை வெட்டிய 6 சிறார்கள் அதிரடி கைது! என்ன நடந்தது? ஷாக்
திருநெல்வேலி: நாங்குநேரியில் பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றியும், பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சின்னத்துரை. இவருக்கு 17 வயது ஆகிறது.

சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தங்கை பெயர் சந்திரா செல்வி. இவருக்கு 14 வயது ஆகிறது. இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தான் சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இதுபற்றி சின்னத்துரை தனது தாயிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் சின்னத்துரையை பழிவாங்க மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது.
இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் கண்காணிப்பு இல்லத்தில் போலீசார் அடைத்துள்ளனர். கைதானவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அலற வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications