நெல்லையப்பர் கோவில் அன்னதானத்தில் நரிக்குறவர் சமூக குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு? புகார் பின்னணி
திருநெல்வேலி: அண்ணாதுரை நினைவு நாளில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடந்த அன்னதானத்தின் போது நரிக்குறவர் சமூக குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி குழந்தை பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மூத்த செய்தியாளர் ஒருவர் இது தொடர்பான வீடியோவையும் செய்தியையும் பகிர்ந்து இருந்தார். அது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் இலவச அன்னதானம் (அறுசுவை உணவு) வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நெல்லையப்பர் கோவிலிலும் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நெல்லையப்பர் கோவிலுக்கு உள்ளே தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் எம். அப்பாவு, திருநெல்வேலி மேயர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அமர்ந்து உணவருந்தினர். ஆனால், அதே சமயம் அந்த உணவைப் பெற வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களுக்கு உணவு கிடைக்காததால், அந்தச் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமூக ஆர்வலரின் உதவி
இந்தச் சம்பவத்தைப் பார்த்த ஒரு சமூக ஆர்வலர், ஏமாற்றமடைந்த அந்த சிறுவர்களை அருகில் இருந்த ஒரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவளித்ததாக கூறப்படுகிறது.
சர்ச்சை என்ன
தமிழக அரசு 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் கொள்கையைப் பேசி வரும் வேளையில், அரசின் உயரிய பதவியில் இருக்கும் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்விலேயே, விளிம்பு நிலைச் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கோவிலில் ஏற்கனவே அன்னதானம் வழங்கப்படும்போது இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போதைய சம்பவம் சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த சம்பவத்தை அதிகாரிகள் மறுத்துள்ளனர். கோவிலில் உணவு உண்மையில் தீர்ந்து போனது என்றும், அதனை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கோவில் நிர்வாகம் விளக்கம்
இதனிடையே நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இதன்படி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,' அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 03-02-2026 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் சட்டப் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை டேவிட் ராஜா என்பவர் முகநூல் பக்கத்தில் கோயில் சமபந்தி விருந்தில் பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார்.
தனிநபர் பெயர் வாங்கவே இப்படி செய்திருக்கிறார்
சமபந்தி விருந்து என்பது பொதுவானது. இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை. வந்திருந்த 792 பயனாளிகளும் உணவு அருந்திவிட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் உண்மைக்கு புறம்பாக பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications