விடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில் வீடியோ
பெண்ணிடம் அரிவாளை காட்டி.. நகை பறிக்க முயன்ற 3 பேரை தேடி வருகிறது போலீஸ்
நெல்லை: விடிகாலை நேரத்தில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே திரண்டுவிட்டனர்.. அப்படி ஒரு திகில் சம்பவம்தான் நெல்லையில் நடந்துள்ளது!
Recommended Video
நெல்லை மாவட்டம், பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர் சண்முகநாதன்.. இவரது மனைவி செல்வரத்தினம்... வழக்கம்போல், காலை செல்வரத்தினம் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார்.

அப்போது வேகமாக ஒரு பல்சர் வண்டி வந்தது.. அதில், 3 பேர் இருந்தனர்.. ஒருவர் பைக் ஓட்டினார்.. பின்னாடி 2 உட்கார்ந்திருந்தனர்.. அதில் இருந்து ஒருவர் மட்டும் இறங்கி வந்து, கோலம் போட்டு கொண்டிருந்த செல்வ ரத்தினம் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறிக்க முயன்றார்.
இதனால் செல்வரத்தினம் அதிர்ச்சி அடைந்தாலும், அடுத்த செகண்டே உஷார் ஆனார்.. தன் நகையை அவரும் கெட்டியாக பிடித்து கொண்டார்.. கொள்ளையன் 2 பேரும் நகையை பிடிச்சு இழுக்க, அதே நகையை செல்வரத்தினமும் இழுத்து பிடித்து கொண்டு, "திருடன் திருடன்" என சத்தம் போட்டு கத்தினார்.
விடிகாலை நேரம் என்பதால், அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு வந்துவிட்டனர்.. செல்வரத்தினம் மகன் நடராஜன் வேகமாக ஓடி வருவதை பார்த்த கொள்ளையன், ஓடிப்போய் நின்று கொண்டிருந்த பைக்கில் ஏறி தப்பினார்.. ஆனால் நடராஜன் அவர்களை விரட்டி கொண்டே ஓடினார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் கையில் கொண்டு வந்திருந்த அரிவாளை வெட்டுவது போல் மிரட்டி காட்டி நடராஜனையும் கீழே தள்ளி விட்டனர்.. பிறகு 3 பேருமே பைக்கில் பறந்துவிட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பைக்கில் 3 பேரில் 2 பேர் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.. அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவும், குற்றவாளிகள் தேடப்பட்டு வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications