அண்ணே நீங்க தான் ஒரு முடிவு சொல்லணும்! துரைமுருகனிடம் கண்ணை கசக்கிய நெல்லை திமுக நிர்வாகிகள்!
நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு ஆய்வு நடத்தச் சென்ற மூத்த அமைச்சர் துரைமுருகனிடம், அம்மாவட்ட திமுக நிர்வாகிகள் கண்ணை கசக்கி நின்று அவரது மனதை கரைத்திருக்கிறார்கள்.
கல்குவாரி விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கடும் கெடுபிடி காட்டுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி அரசு மீதும் திமுக மீதும் கோபத்தை காட்டத் தொடங்கியிருப்பதாக முறையிட்டுள்ளனர்.
எந்த ஊருக்கு சென்றாலும் உள்ளூர் கட்சிக்காரர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப செயல்படக் கூடிய அமைச்சர் துரைமுருகன், இந்த விவகாரத்திலும் சற்று மனம் இறங்கி வந்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல் குவாரி ஒன்றில் கடந்த மே மாதம் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்ததால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு நடத்தி பூட்டு போட்டது மாவட்ட நிர்வாகம். இதனால் கடந்த மூன்று மாதங்களாக கல் குவாரிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.

தொழிலாளர்கள்
இவர்கள் அனைவரும் தங்கள் கோபத்தை மெல்ல திமுக அரசு மீது காட்டத் தொடங்கியதோடு, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், சபாநாயகர் அப்பாவு, ஞனதிரவியம் எம்.பி. என முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கும் படையெடுக்கத் தொடங்கினர். இதனால் தவறு செய்த கல்குவாரி உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதித்து விட்டு பழையபடி கல்குவாரிகளை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் மல்லுக்கட்டி வந்தனர்.

அரசு மீது கோபம்
ஆனால் நெல்லை மாவட்ட ஆட்சியரோ கல்குவாரிகளை மீண்டும் திறப்பதில் கடும் கறார் காட்டி வந்தார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு ஆய்வு நடத்தச் சென்ற அமைச்சர் துரைமுருகனிடம், 'அண்ணே மாவட்டத்தில் நாங்க கட்சி நடத்தனுமா வேண்டாமா, யதார்த்த கள நிலவரம் இப்படி இருக்கு, வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்களின் கோபம் நம் பக்கம் திரும்புது' என முழு விவரத்தையும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். மேலும், நீங்க தான் இதற்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் என சிலர் கண்ணையும் கசக்கியிருக்கிறார்கள்.

அபராதத் தொகை
அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை அவர் திமுகவின் பொதுச்செயலாளராக இருப்பதால் உள்ளூர் கட்சிக்காரர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கக் கூடியவர். அதனால் கல் குவாரி விவகாரத்திலும் மனம் இறங்கி வந்த துரைமுருகன், உடனடியாக நெல்லை கலெக்டரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அபராதத் தொகையை 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூலித்துவிட்டு முதலாளிகளுக்காக இல்லாமல் தொழிலாளிக்காக கல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறார்.
-
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications