Nellai kavin: ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவினின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
திருநெல்வேலி: நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொலை செய்த சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணனை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் (27). கவினும், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஐடி ஊழியரான கவின் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்காக வந்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாயாரை கைது செய்தால் மட்டுமே கவின் உடலைப் பெறுவோம் எனக் கூறி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கும் என்று கூறி கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சுர்ஜித்தின் தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் நேற்று கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்குப் பிறகு கவினின் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications