திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா.. மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடல்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லவும் அனுமதி அளிக்கப்படவில்லை. தெருமுனையில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,

Recommended Video

    தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு... என்ன காரணம்?

    டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற பலருக்கு கெரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரானாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 17 பேர் என்று கூறப்படுகிறது

    ஆபத்து.. டெல்லி சென்று வந்த 616 பேர் எங்கே.. செல்போனும் ஸ்விட்ச் ஆப்.. தீவிர தேடுதலில் அதிகாரிகள்ஆபத்து.. டெல்லி சென்று வந்த 616 பேர் எங்கே.. செல்போனும் ஸ்விட்ச் ஆப்.. தீவிர தேடுதலில் அதிகாரிகள்

    அதிகம் பேர் வந்துள்ளார்கள்

    அதிகம் பேர் வந்துள்ளார்கள்

    இதையடுத்து நெல்லை மேலப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்க மாவட்ட ஆட்சி தலைவர் ஷில்பா நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "மேலப்பாளையம் நகர பகுதியில் வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகம் பேர் திரும்பி வந்துள்ளனர்.

    போக்குவரத்து தடை

    போக்குவரத்து தடை

    இந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் இருந்து மேலப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    மளிகை பொருட்கள்

    மளிகை பொருட்கள்

    மேலப்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்க அனைவரும் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். தெரு முனைகளில் மாநகராட்சி மூலமும், வியாபரிகள் மூலமும் காய்கறிகள் , மளிகை பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலப்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் உள் தெருக்களில் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    போலீஸ் கண்காணிப்பு

    போலீஸ் கண்காணிப்பு

    உடல்நலக்குறைவு போன்ற அத்தியாவசிய தேவைக்கான மருத்துவ சான்றிதழ்களுடன் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களின் விவரங்கள, அவர்கள் மீண்டும் வீடு திரும்பும் விவரங்களை பாதுகாப்புக்கு உள்ள போலீசார் தனிப்பதிவேட்டில் பதிவு செய்து காண்காணிக்க வேண்டும்.இந்த கண்காணிப்புகளை தீவிரமாக செயல்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" இவ்வாறு மாவட்ட ஆட்சி தலைவர் ஷில்பா கூறினார். இதையடுத்து மேலப்பாளையத்திற்கு வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டது போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    nellai melapalayam all roads blocked, collector important order after 22 person affected coronavirus in nellai city
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X