நெல்லை குவாரி விபத்து.. தலைமறைவான சேம்பர் செல்வராஜை காட்டிக்கொடுத்த சிக்னல்- மங்களூர் லாட்ஜில் கைது!
நெல்லை : நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் மங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி அருகே பாறை சரிந்து விழுந்த கல் குவாரியில், கற்குவியலில் சிக்கி பலர் பலியான நிலையில், குவாரி உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவாரி விபத்து
திருநெல்வேலி மாவட்டம், தருவை அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் சேம்பர் செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் கிரஷர் அருகே உள்ள குவாரியில், கடந்த 14ஆம் தேதி இரவில் குண்டுக்கல் ஏற்றும் பணி நடந்தது. அங்கு, 300 அடி ஆழமுள்ள குவாரியில், மூன்று இயந்திரங்கள், இரண்டு லாரிகளில் ஆறு பேர் கற்களை ஏற்றினர். இரவு 11:30 மணிக்கு திடீரென பாறை சரிந்து விழுந்ததில், ஆறு பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

மீட்புப் பணி
இதில் 6 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். ஆறாவது நபரை தேடும் பணி தீவிரமாக 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.

விதி மீறல்
இந்த கல் குவாரிக்கு 2018 முதல் 2023 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் தோண்டி எடுக்க வேண்டிய அளவை விட, அதிக அளவில் பாறைகளை தோண்டி எடுத்து விட்டதாகவும், ஏப்ரலில் கனிமவளத்துறையினர் ஆய்வு நடத்தி குவாரி அனுமதியை ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் இரவு நேரங்களில் விதியை மீறி இந்த குவாரி செயல்பட்டு வந்துள்ளது.

தலைமறைவு
குவாரி விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குவாரி உரிமதாரர் சங்கரநாராயணன், குவாரி மேலாளர் ஜெபாஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

வீடுகளில் சோதனை
விசாரணையின் ஒருபகுதியாக குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரின் திசையன்விளையில் உள்ள வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். விபத்து நடந்த குவாரியில் உள்ள அலுவலகத்தின் பூட்டினை வருவாய்த்துறை முன்னிலையில் உடைத்து பல மணிநேரம் சோதனை செய்தனர்.

லாட்ஜில் கைது
விபத்து நடந்த குவாரியின் உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு லாட்ஜில் பதுங்கியிருப்பதாக போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். அதன் பேரில் அங்கு சென்ற நெல்லை போலீசார் லாட்ஜை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர்.

அதிர்வலை
இருவரும் நெல்லை அழைத்துவரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நெல்லை குவாரி விபத்தில் உரிமையாளர்கள் கைது செய்யப்படாமல் இருந்தது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதிரடியாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications