காதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்!

புதுமாப்பிள்ளையை வெட்டி கொன்று ஒரு கும்பல் தப்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாப்பிள்ளையின் தலையை துண்டித்த பெண் வீட்டார்| New groom killed near nellai due to love marriage

    நெல்லை: காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர் பெண் வீட்டினர்! தலையை ரயில்களுக்கு நடுவிலும், முண்டத்தை தண்டவாளத்திலும் போட்டுவிட்டு சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமம் மறுகால்குறிச்சி. இங்கு வசித்து வரும் தம்பதி அருணாசலம் - சண்முகத்தாய். இவர்களுடைய 2-வது மகன் நம்பிராஜன். 23 வயதாகிறது.

    அங்குள்ள பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அதே ஊரை சேர்ந்த வான்மதி என்ற பெண்ணை காதலித்தார்... வான்மதிக்கு 19 வயது... ஒரே சமூகம்தான்.. இருந்தாலும், பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    வாடகை வீடு

    வாடகை வீடு

    இதனால், 2 மாசத்துக்கு முன்பு, காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். அதே ஊரில் இருந்தால் வாழ விட மாட்டார்கள் என்று பயந்து, நெல்லை டவுன் வயல் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினர். இவர்கள் வசித்து வந்த அதே பகுதியில் முத்துப்பாண்டியன் என்பவரும் வசித்து வருகிறார். இவர், இரு வீட்டு தரப்பையும் சமாதானம் செய்து வைப்பதாக வான்மதியிடம் சொல்லி உள்ளார்.

    வான்மதி

    வான்மதி

    இந்த நிலையில் 2 நாளைக்கு முன்பு முத்துப்பாண்டியன் நம்பிராஜனுக்கு போனை போட்டு, ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூப்பிட்டுள்ளார். அதனால், வான்மதியிடம் வி‌‌ஷயத்தை சொல்லிவிட்டு பைக் எடுத்து கொண்டு கிளம்பினார் நம்பிராஜன். ஆனால் நைட் நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை... இதனால் பயந்துபோன வான்மதி, மாமனாருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லவும், அவர் உடனே டவுன் போலீசில் புகார் தந்தார்.

    தீவிரம்

    தீவிரம்

    இதையடுத்து போலீசார் நம்பிராஜனை தேடும் முயற்சியில் இறங்கினர். அப்போதுதான், ரெயில்வே கேட் பகுதியில், நம்பிராஜனின் பைக் மட்டும் தனியாக நின்றதை கண்டு தீவிரமாக தேடினார்கள். பிறகு அதே ரயில்வே கேட் பகுதியில், நம்பிராஜன் தலை துண்டாகி கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர். சடலத்தில் ஏராளமான வெட்டுக்காயங்கள் இருந்தன.

    சடலம்

    சடலம்

    யார் இவரை கொன்றார்கள் என்ற தெரியவில்லை என்பதால் சடலத்தை மீட்டு இதுகுறித்து விசாரணையை ஆரம்பித்தார். அப்போதுதான், பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்ட முத்துப்பாண்டியன், வான்மதியின் சொந்தக்காரர்களை ஆயுதங்களுடன் வரவழைத்து, மாப்பிள்ளையை கொடூரமாக கொன்றது தெரியவந்தது. ரயில்களுக்கு இடையே உடலும், தண்டவாளத்துக்கு நடுவில் தலையையும் போட்டுவிட்டு தப்பி உள்ளனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட, வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, உறவினர்கள் செல்லத்துரை, முருகன் முத்துப்பாண்டியன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த இளைஞர் மிக கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+