நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!
நெல்லை: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. இன்று அதிகாலை நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக காயமடைந்த பயணிகளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

டிரைவரின் தூக்கக் கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா அல்லது அதிவேகத்தில் சென்றதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நெல்லை - திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications