Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாசில்தார் விஜி பாளையங்கோட்டையில் அசிங்கமா சிக்கினாங்களே.. திருநெல்வேலி அரசு அதிகாரி நிலைமை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழகத்தில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதுடன், அரசு துறையில் பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகிறார்கள். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றம் வரை சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனையை நீதிமன்றம் வழங்குகிறது. ஆனாலும்கூட லஞ்ச புகார்கள் குறையவில்லை. அதோ திருநெல்வேலியில் என்ன நடந்தது பாருங்கள்.. யாரிந்த விஜி?

தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2025 மார்ச் வரையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டதில் வருவாய்த்துறை பெருத்த அதிர்ச்சியை தந்தது.

Tahsildar Thirunelveli palayamkottai

ஏனென்றால், லஞ்சம் வாங்கி கைதானவர்களில் முதலிடத்தில் இருப்பதே வருவாய்த்துறைதான். இதில் சர்வே துறையில் மட்டும், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை 92 பேர் கைதாகியிருந்தனர். 2வது இடத்தில் மின்சார வாரியமும், 3வது இடத்தில் உள்ளாட்சி துறையும், அடுத்தபடியாக பத்திரப்பதிவு துறையும் என அந்த லஞ்சம் லிஸ்ட் அதிர வைத்தது. இதில், விஏஓக்களைவிட, தாசில்தார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது

ஆனாலும் இந்த எண்ணிக்கை குறையவே இல்லை.. அதிலும் பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகி அசிங்கப்படுவது, மிகுந்த கவலையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

திருப்பத்தூர் ஸ்பெஷல் தாசில்தார்

கடந்த வாரம்கூட, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டார்.. நாட்றம்பள்ளியை சேர்ந்தவர்கள் பெருமாள் - மலர் தம்பதியர். இதில் உடம்பு சரியில்லாமல் மலர் இறந்துவிட்டார்.. உழவர் பாதுகாப்பு கூட்டுறவு சங்கத்தில் பெருமாள் உறுப்பினராக இருக்கிறார்..

குடும்ப உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக அரசு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. எனவே இந்த தொகையை பெறுவதற்காக நாட்றம்பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரான வள்ளியம்மாளிடம் அணுகி இருக்கிறார்.

அதற்கு வள்ளியம்மா ரூ.3,000 லஞ்சம் கேட்டாராம். உடனடியாக இதுகுறித்து திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் தந்ததையடுத்து, ஸ்பெஷல் தாசில்தார் வள்ளியம்மாள் கையும் களவுமாக சிக்கிவிட்டார்.. ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கும் உதவித்தொகையிலும் லஞ்சமா? என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர்..

கொன்னுடுங்க சார்

உடனே இதுகுறித்து வள்ளியம்மாளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது வள்ளியம்மா திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்து விட்டார்.. அவரை உடனடியாக மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது வள்ளியம்மா, என்னை கொன்னுடுங்க சார் என்று அழுதுகொண்டயிருந்தாராம்.

இதோ இப்போதும் ஒரு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கி திருநெல்வேலியில் மாட்டிக் கொண்டுள்ளார்.. நெல்லை அருகே உள்ளது சீவலப்பேரி கிராமம்..

தாசில்தார் விஜி

இங்கு அரசு அனுமதி பெற்று மணல் அள்ளும் தொழில் செய்து வருபவர் ரவி. இவரிடம், "தொடர்ந்து மணல் அள்ள வேண்டும் என்றால் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி கேஸ் போட்டுவிடுவேன்" என்று மிரட்டியிருக்கிறார் துணை தாசில்தார் விஜி.

கடந்த 2019ல் இப்படியொரு மிரட்டலை விஜி விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரவி, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல், உடனடியாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தந்தார்..

அதிரடி தண்டனை தந்த நீதிபதி

பிறகு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பணத்தை ரவிவழங்கிய போது துணை தாசில்தார் விஜியை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் கையும், களவுமாகப் பிடித்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா, நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கினார்..

இதில், துணை தாசில்தார் விஜிக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறைத்தண்டனை பெற்றுள்ள விஜி, இப்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+